முஸ்லிம்கள் குறித்து மீண்டும், கார்ட்டூன் வெளியிட்டுள்ள சார்லி ஹெப்டொ
இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டுள்ள சார்லி ஹெப்டொ பத்திரிகைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
பிரான்சின் பிரபல பத்திரிகையான சார்லி ஹெப்டொ பல்வேறு நையாண்டி கார்ட்டூன்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிகொள்வதுண்டு.
முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அப்பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பத்திரிகை அலுவலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில், 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதேசமயத்தில் சார்லி ஹெப்டொ பத்திரிகையும் அத்தகைய கார்ட்டூனை வெளியிட்டிருக்க கூடாது என்ற குரல்களும் ஒலித்தன.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்பாக மீண்டும் கார்ட்டூனை வெளியிட்டு அப்பத்திரிகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தீவிரவாத தாக்குதலில் இஸ்லாமியர்களின் பங்கும் உண்டு என்பது போன்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.
மேலும் ”இஸ்லாமோபோபியா” என்ற இந்நிலை காரணமாக எதனையும் வெளிப்படையாக பேச பொதுமக்கள் தயங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இஸ்லாம் மதத்தை பிரசாரம் செய்யும் தாரீக் ரமதன் என்பவர் குறித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. அதில், ரமதன் நேரடியாக எந்த குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடவில்லை.
இஸ்லாம் மதத்தை மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார்.
எனினும் அவரிடம் படிக்கும் மாணவர்கள் பின் நாட்களில் பத்திரிகையாளராகவோ அதிகாரியாகவோ ஆனாலும் இஸ்லாம் மதம் குறித்து விமர்சிக்க பயப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கார்ட்டூனுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சார்லி ஹெப்டொவின் செயல் இன ரீதியாக உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment