விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டுள்ள தீர்வு திட்ட வரைபில், முஸ்லிம்கள் குறித்த விடயங்கள்..!
வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபுக்கான முன்மொழிவுகள் 07-03-2016 தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் முன்மொழிந்த வரைபின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான 23 முன்மொழிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
01. இந்தியாவில் மாநிலங்கள் மொழிரீதியாக பிரிக்கப்பட்டிருப்பதைபோல இலங்கையானது அடிப்படையில் இரு பரந்த நிலங்களாக அதாவது, பெரும்பான்மையாக தமிழ்பேசும் பிரதேசங்களை கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் மற்றும் பெரும்பான்மையாக சிங்களம் பேசும் பிரதேசத்தை கொண்ட மற்றைய 7 மாகாணங்கள் மற்றொரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தல் வேண்டும்.
02. இவ்விரு பரந்தமொழி ரீதியான மாநிலங்களிலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அலகாகவும் தமிழ் பேசும் மலையக தமிழர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஓர் அலகாகவும் இனங்காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
03. சிங்களம் பேசுவோரை கொண்ட மாநிலம் ஆனது அதனுள் பிரிக்கப்படல் வேண்டுமா? என்ற கேள்வியானது சிங்கள மக்களால் தீர்மானிக்கப்படல் வேண்டும்.
04. பெருநகருக்குரிய கொழும்பு பிரதேசமானது தனியானதோர் நிர்வாகத்தை கொண்டு நாட்டின் தலைநகர் அலகாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
05. மேலே தொடர்ச்சியாக இந்த ஆவணத்தில் ஒப்பிக்கப்பட்டிருக்கும் வரலாற்று ரீதியான பின்புலம் மற்றும் 1833ம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் சமூகத்தால் நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வந்த தனித்துவ தன்மையின் அடிப்படையில்,
எந்த வொரு சமூகத்தை சேர்ந்த மக்களும் மற்றய சமூகங்களில் ஆதிக்கம் செலுத்துவதோ அல்லது அவர்களில் தங்கியிருப்பவர்களாக இருக்கும் வகையில் அவர்களை சார்ந்திருக்கவோ வேண்டியதில்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்கும் ஒற்றையாட்சி முறைக்குரிய அரசாங்கத்திற்கு பதிலாக கூட்டாட்சி சமஸ்டி ஆட்சி முறைக்குரிய அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டியது அத்தியாவசியமாகின்றது.
இலங்கை பிரஜை ஒருவரும் சட்டரீதியாக இன்n னாருவருக்கு கீழானோர் என அவனோ, அவளோ உணர்வதற்குரிய வழிமுறையை இல்லாதொழிப்பது உறுதிசெய்யப்பட வேண்டியது அத்தியாவசியமாகும்.
வெறும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் அவனுடைய அல்லது அவளுடைய சமூக சட்டரீதியாக ஏனை யோரிடமிருந்து தமக்கென்று அளவு மீறிய பயனை கோரக்கூடாது.
06. இலங்கையில் தமிழ் பேசுவோரை கொண்டுள்ள வடகிழக்கு பிரதேசங்களினுள் தற்போதைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒன்றிணைதலின்போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபையானது உருவாகும். இத்தன்னாட்சி பிராந்தியத்தின் நிலை, பரிமாண மற்றும் நியாயாதிக்க எல்லைகள் ஆகியன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு முடிவு செய்யப்படுதல் வேண்டும்.
மொழிரீதியிலான தமிழ் பேசும் வடகிழக்கு மாநிலமானது மாநில பாராளுமன்றத்தை கொண்டிருக்கும்.
07. மலையக தமிழர்களுக்காக அதேபோன்ற ஒழுங்குகள் சிங்கள மொழி ரீதியான மாநிலத்தினுள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
08. அதிகாரம் ஆனது ஒரு சமூகத்தில் குவிக்கப்படும் அபாயத்தை தவிர்த்து அதிகாரங்கள் சகல சமூகங்களுக்கிடையிலும் சமமாக பகிரப்படுதலை முழு நாட்டினதும் பாராளுமன்ற பிரதிநிதிகள் உறுதிப்படுத்தல் வேண்டும்.
09. எது எவ்வாறு இருப்பினும் வடகிழக்கு மாநிலம் மற்றும் முஸ்லிம் தன்னாட்சி பிராந் தியம் மற்றும் மலையக தன்னாட்சி பிராந்தியம் பாதிக்கத்தக்கவாறு மத்திய கூட்டாட்சி சமஸ்டி பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் உரிய மாநிலத்தாலோ, அல்லது தன்னாட்சி பிராந்தியத்தாலோ அங்கீகரிக்கப்படாத வரையில் நடைமுறைக்கு வரக்கூடாது.
10. வடகிழக்கு மாநில பாராளுமன்றம், வடகிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை அதேபோ ல் மாலையக பிராந்திய சபை ஆகியவற்றுக்கு தமது சொந்த அலுவல்களை மேற்கொள்ள தக்க வகையில் முழுமையாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
இப்பாராளுமன்றத்துக்கும் பிராந்திய சபைகளுக்கும் போதிய சுயாட்சியானது ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.
இலங்கையை விட பரப்பளவிலும், குடிப்பரம்பலிலும் சிறிய நாடாகிய சுவிஸ்லாந்தில் நடைமுறையில் கன்டோன் நாட்டு பிரிவு முறைமையானது அவசியமான மாற்றங்களுடன் இங்கு சுவிகாரம் செய்யப்படுவதற்காக பரிசீலிக்கப்பட முடியும்.
தமிழ் பேசும் மாநில அரசியல் மத்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் நிறைவேற்றும் அதிகாரம் எவற்றையும் கொண்டிருக்கப்படமாட்டார். அவை மாநிலத்தின் அமைச்சரவையினாலேயே தன்னுடமையாக்கப்படும்.
11. இலங்கையின் அரச கரும மொழிகள் சிங்களம் மற்றும் தமிழ் ஆவதுடன் இலங்கையானது ஆங்கிலமானது இணைப்பு மொழியாகவும் இருத்தல் வேண்டும், வடகிழக்கு மாநிலத்தில் உள்ள சகல பதிவுகள் மற்றும் நடவடிக்கைகள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பேணப்பட்டு தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.
மலையக தமிழ் பிராந்திய சபை தவிர்ந்த தீவின் மீதி பாகத்தில் பேணப்படும் சகல பதிவுகளும், மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பேணப்பட்டு சிங்களத்தில் இருத்தல் வேண்டும்.
மலையக பிராந்திய சபைகளில் பேணப்படும் சக ல பதிவுகளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைளும் தமிழிலில் அல்லது சிங்களத்தில் நடைபெறலாம். அவற்றின் தமிழ் அல்லது சிங்கள மொழிபெயர்ப்பும் ஆங்கில மொழி பெயர்ப்பும் பேணப்படல் வேண்டும்.
12. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குகையில் தொடர்ச்சியாக வந்த மத்திய அரசாங்கங்களால் சுற்றயல் நிர்வாகங்களை வலிதற்றதாக்குவதன் பொருட்டு இதுவரை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இல்லாதிருக்க வேண்டும்.
Ha ha.these busterds don't need Co existing with other communities. As Muslims we will never support merging east with north.we are better with sinhalese than you racist.we want one srilanka. we can trust a venoumous snake even a devil not you.ok one quistion what about tamils living in colombo...I think we need to kick out them to north.
ReplyDeleteHon.Wiki is thinking their future only. They do not care others in prepare their resolution. Even they have drafted this without the concerns of Muslim community and EP council. It is like as monopoly government
ReplyDelete