மஹிந்தவை நேரில் சந்தித்து, அழைப்பு விடுக்க தீர்மானம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னிலைப்படுத்திய, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின பேரணிக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இம்முறை, சுதந்திரக் கட்சியின் மே தின ஊர்வலம் காலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கிருளப்பனையில் பிரிதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் மே தின நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, காலியில் நடைபெறவுள்ள மே தின பேரணியில் கலந்து கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் நாளை அல்லது நாளை மறுதினம் முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பை விடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், கிருளப்பனையில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular former president.bribes ministets cant forget mahinda mahattya
ReplyDelete