Header Ads



நான் வாயைத் திறந்தால் வம்பு, எனவே மௌனவிரதம் அனுஷ்டிக்கிறேன் - ஹக்கீம்

– மப்றூக் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுள் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவால்களையெல்லாம் தாம் சந்தித்துள்ளமையினால், தற்போது ஏற்பட்டிருக்கும் குடுமிச் சண்டையில் தான் ஈடுபட வேண்டிய தேவையில்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

அதேவேளை, பத்திரிகைகளில் சிலர் அறிக்கைப் போர்களை நடத்திவரும் நிலையில், கட்சியின் தலைவர் என்கிற வகையில், தான் – ஒரு மௌன விரதத்தினை அனுஷ்டித்து,  கட்சியை மிகவும் கச்சிதமாக நடத்திக் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளி நோயாளர் பிரிவுக்கான கட்டிடம், மருந்துக் களஞ்சியம், இயன் மருத்துவ அலகு, தாதியர் விடுதிக் கட்டிடம், மூடிய நடைபாதை, அம்பியுலன்ஸ் வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி ஆகியவற்றினை, அமைச்சர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை -02- திறந்து வைத்த பின்னர், அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

எதிர்வரும் 05 ஆம் திகதி தொடக்கம் நாடாளுமன்றமானது அரசியல் யாப்பு சபையாக தன்னுடைய அமர்வுகளைத் தொடங்கவுள்ளது. இதனூடாக இந்த நாட்டுக்கான புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் ஒரு நடவடிக்கை உருவாகவுள்ளது. எனவே, நாம் மிகத் தீவிரமாக இயங்கி, எமது சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.

எதிர்வரும் நோன்பு காலத்துக்கு முன்பாக, இங்குள்ள பிரதேசங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம். இதேவேளை, நெய்னாகாடு போன்ற பகுதிகளிலுள்ள குடிநீர் மஞ்சள் நிறத்தில் உள்ளமையினால், குடிப்பதற்கு அது உகந்ததாக இல்லை. அதற்குரிய தீர்வினையும் மிகவிரைவில் நாம் வழங்கவுள்ளோம்.

அம்பாறை மாவட்டத்தில், குடிநீர்த் தேவையினை மிக வேகமாக நிறைவு செய்யும் ஒரு நிலையினை நாம் அடைந்திருக்கின்றோம். அதற்கான ஆரம்ப கட்டப் பணியினை தொடங்கி வைத்த எமது கட்சியின் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஒரு மௌன விரதத்தினை நான் அனுஷ்பது நல்லது என்று நினைக்கிறேன்.  வாயைத் திறந்தால் வம்பாகப் போய்விடும் என்பதற்காகவே மௌன விரதம் நல்லது என்று நினைக்கிறேன். எனவே, தற்போதைய கட்சி விவகாரங்களைக் கதைப்பதை நான் தவிர்த்து வருகிறேன்.

பத்திரிகைகளில் சிலர் அறிக்கைப் போர்களை நடத்துகின்றனர்.  எனவே, தலைமை மட்டத்தில் ஒரு மௌன விரதத்தினை அனுஷ்டித்து,  கட்சியை மிகவும் கச்சிதமாக நடத்திக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்த மட்டில் கட்சிக்குள் தற்போது நிலவுகின்றதை விடவும் மிகப்பெரும் சவால்களையெல்லாம் நாம் சந்தித்திருக்கிறோம். எனவே, தற்போதைய குடுமிச் சண்டையில் நான் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

இக் கூட்டத்தில் பார்வையாளர்களாக பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

3 comments:

  1. ஆமாம்.... உங்களின் மௌன விரதம் தான் எமது மக்களுக்கு விடிவு என்று நீங்க சொல்ல வருகிறீர்கள் என்றால் அது முற்றிலும் கோழைத்தனமான கருத்து என்றுதான் சொல்லவேண்டும். முஸ்லீம்களின் உரிமைகளுக்காக போராடும் அரசியல் கட்சி என்று சொல்லி மக்களை முட்டாள்களாக்கி வரும் நீங்கள் அதற்கான பரிசை ஒவ்வொரு தேர்தலிலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்பதையும் மறந்துவிடவேண்டாம். இனவாதிகள் எமது மக்களை கோழைத்தனமாக தாக்கியபோதும் தூற்றியபோதும் நீங்கள் மௌனவிரதம் தான் அனுபவித்தீர்கள். அதன் விளைவு என்ன என்பது இப்போது அனைவருக்கும் தெரிந்தவொன்றுதான்.

    ReplyDelete
  2. நீங்கள் ஏது பேசினாலும் கேட்பதற்கு கூட்டம் இருக்கும் பாே்து உங்களுக்கு சாெ்ல்லித் தரவா வேண்டும் பேசுவதற்கு

    ReplyDelete
  3. பெரிய மேதாவி தத்துவம் சொல்கிறார் கேட்டுக் கொள்ளுங்கள். இவரை நம்புவது மண்குதிரையை நம்புவது ஆகும். ஏமாற்றியவர், கழுத்தறுப்பு செய்தவர், சுயநலவாதி, பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு, முஸ்லிம்கள் பயமுறுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட போதெல்லாம் மெளனம் காத்த உமது நடவெடிக்கைகளை எதிர்த்தால் அல்லது அதுதிரிப்தி தெரிவித்தால் அவற்றை மக்கள் முன் கொண்டு வந்தால் அதன் பெயர் குடும்பிச் சண்டை, இதன் பொருள் அறிந்து தான் கூறுகின்ரீரோ தெரியவில்லை. கட்சியை கட்சிதமாக உமது சுயநலத்துக்கு இட்டுச் செல்லுவதற்கு, முஸ்லிம் இளைஞர்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் ஒன்றும் நீர் கிள்ளிப் போடுவதை அள்ளிக்கு போவதற்கு காத்துக்கிடக்கும் உம்மை சுற்றி கிடக்கும் சுயநல கும்பல்கள் இல்லை. ராஜபக்சவிடம் ஆப்ப சாப்பிட்டுக்கு இருந்த மைத்ரி போல் முஸ்லிம் காங்கிரஸிலும் வருவார், வரவேண்டும், அதுதான் முஸ்லிம்களுக்கு நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.