சதாம் ஹுசைன் இல்லாத ஈராக், பட்டினி கொடுரத்தினால் புற்களில் சாறுவைத்துக் குடிக்கும் மக்கள்
இராக்கிய நகரமான ஃபல்லுஜாவில் சிக்கியுள்ள மக்கள் உணவின்றி பட்டினியில் வாடுவதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஃபல்லுஜா நகரை ஐஎஸ் பிடியிலிருந்து மீட்க அரச படையினர் போராடிவருகின்றனர்.
தற்போது ஐஎஸ் ட்டுப்பாட்டின் உள்ள இந்த நகரத்தை மீட்க முயன்று வரும் அரசு அந்தப் பகுதிக்கு உணவுப் பொருட்கள் செல்வதை நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அந்தப் பகுதியில் உணவு ஏதும் இல்லாமல் மக்கள் புற்களில் சாறு வைத்துக் குடிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவும் மருந்தும் கிடைக்காமல் மக்கள் இறந்துவருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment