திருமணத்திற்கு முன், மருத்துவரீதியாக ஒரு வழிகாட்டல்
-NIDUR-
இப்போது திருமண வாழ்வு கதைகளில் சொல்லுவது போலவும் அறிவர்கள் சொன்னது போலவும் சொர்கத்திலும், வர்கத்திலும் நிச்சயிக்கபடுவதாக தெரியவில்லை. எதோ கடமைக்காக நடத்தி பின்னர் சில நாளில் மண முறிவை நடுகிறனர்.
சில மாதங்களில் மணவாழ்வு பிணவாழ்வாக மாறிபோவதுண்டு. இதற்கெல்லாம் காரணம் என்ன சிந்தித்தோமா? இல்லை பணத்தை தேடுவதில் முழுமையான? சிந்தனை செலுத்துவதால் மணமுறிவை பற்றி சிந்திக்க எல்லோருக்கும் நேரமில்லையா?
இது கண்களை கூவி விற்றுவிட்டு சித்திரத்தை வாங்குகிற அறிவாளிகள்? நிறைந்த காலமாக இருக்கிறது. மரித்து போகும் நிலை பற்றியும் நோயாளிகளையும் சிந்திக்க வைக்க ஒரு சின்ன வழிகாட்டல். செய்ய எண்ணினோம் அதன் தொடர்சியாக, இது நிச்சயம் உங்களுக்கல்ல அனால் நோயாளிகளுக்குதான்? அவர் தான் படிக்கவும் மாட்டார் கடைப்பிடிக்கவும் மாட்டரே! என நீங்கள் கூறுவது என் காதுகளில் சத்தமாக கேட்கிறது .நீங்கள் படித்து சொல்லீடுவீங்க இல்லையா?
இப்போது முறையில்லாத வளர்ப்பினால் இளமையிலேயே முதுமையை விழுங்கி வாழவேண்டிய நேரத்தில் மரண ஓலத்தை கேட்க முடிகிறது உண்மையை சொல்லுகிறவர்கள் இங்கு பித்து பிடித்தவராக தோற்றமளிக்கிறார் என்ன செய்வது இதுவும் காலத்தின் கட்டயாம்.
நீங்கள் திருமணத்திற்கு நிற்கிறீரா? உண்மையிலேயே இதை கடைபிடித்தல் உறுதியாக பலன் கிடைக்கும் ஆனால் நீங்கள் நான் சொல்லுவதை நூறு விழுக்காடு கடைபிடிக்க வேண்டும் ஏழு மலைதாண்ட சொல்லவில்லை வாழ்வில் சில மாற்றங்களை செய்து கொள்ளுங்கள் வாழ்கை உங் களுக்கே உங்களுக்கு மட்டுமே இனி... நீங்கள் படியுங்கள் இனியும் கதை வளர்க்க விரும்பவில்...
அன்பு உறவுகளே இப்போது நமது வாழ்க்கை முறை மாறித்தான் போனது இருந்தாலும் நாம் புதியதாக வாழ்ந்துதான் ஆகவேண்டும் என எண்ணுகிறோம் எப்படி என்பதுதான் புரியவில்லை.
மாறுபட்ட வாழ்க்கைமுறை மாறுபட்ட உணவு முறை சுற்று சூழல் இப்படி நம்மை நோய் துரத்தி கொண்டே இருக்கிறது இவற்றை எல்லாம் விட்டு விலகி நோயற்று வாழுவது சிலருக்கு மட்டுமே முடிகிறது எல்லோராலும் இயலுவதில்லை முறையாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் கெட்ட பழக்கமெல்லாம்? இப்போது இல்லை நீங்க எந்த காலத்தில இருக்கிறீங்க? இப்படியான வினாக்கள் நம்மை தாக்க தொடங்கும். என்ன செய்வது இருந்தாலும் சொல்ல வேண்டியிருக்கிறது வாரம் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க பழக வேண்டும்.
பின்னர் உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ வற்றை முறையான தேர்ந்த மருத்துவரிடம் கூறுக. ஆணோ அல்லது பெண்ணோ உங்களின் குறை பாட்டை உறுதியாக நீக்குவார். பாலியல் ரீதியான குறைபாடுகள் எனின் முறையாக விளக்கம் பெறலாம் பின்னர் மற்றவரின் வாழ்கையை கெடுப்பானேன்?
திருமணம் செய்து கொள்ளவிரும்பும் ஆண் அல்லது பெண் தங்களது குருதி(இரத்தம்) என்ன வகை என்பதை அறிந்து கொள்க. குருதி ஒரே பிரிவை இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள். மணப்பெண் அல்லது மணமகன் உண்மையில் அவரைப்பற்றி முழுமையாக தமக்கு ஏற்றவர்தானா? இங்கே பணத்தை குறிக்கோளாக கொண்டவர் அருள் கூர்ந்து படிக்க வேண்டாம் என அறிவுறுத்த படுகிறீர் பணம் பக்கத்திலே வந்து படுத்து கொள்ளாது அது இன்ப வாழ்க்கையையும் தராது.
இப்போதைய பெண்களுக்கு கருப்பை சார்ந்த குறைபாடுகள் மிகப்பலரிடம் இருக்கிறது அதை முறையாக நீக்கி கொள்க பின்னல் வரும் பிணக்குகளுக்கு இந்த கருப்பையின் குறைபடுகளினாலே பல் வேறு பெண்களின் சினங்களுக்கும், பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாக இருக்கிறது நான் சான்று காட்ட ஆயத்தமாக இருக்கிறேன். இந்த கருப்பை குறைபாடுகளை வீட்டு விலக்கின்மை மிகையான வீட்டு விலக்கு, ஒழுங்கற்ற வீட்டு விலக்கு இப்படி இந்த குறைபாடுகளை கருப்பையை பலமடைய வைக்கும் பல மருந்துகள் சித்த மருத்துவத்தில் உண்டு இதை முறையாக செய்து கொள்க.
ஆண்கள் எனின் மயக்கப் பொருட்கள் (மது, புகை)பழக்கத்திற்கு ஆளானவர் எனின் இதோடு கைவிடுக. காரணம் பல்வேறு பாலியல் குறைபாடுகளுக்கு இது காரணம் ஆகிறது. பின்னர் ஆண்மையை பெருக்கும் மருந்துகளை முறைப்படி எடுத்து கொள்க. இதை முறைப்படி எடுத்து கொள்க. இதற்கும் முன்னதாக இருவரும் கழிச்சலை (பேதி ) மருந்து எடுத்து வயிற்றை தூய்மை ஆக்கிகொள்க நலமுடன் இருக்கிறவர்கள் கூட இவற்றை செய்து கொள்வது தவறல்ல.
இப்படி திருமணத்திற்கு இரண்டு மதங்களுக்கு முன்பே தங்களை ஆயத்த படுத்தி கொள்ள வேண்டும் இதற்குள் குழந்தை பேறு பற்றிய முறையான திட்டமிடல் இருக்க வேண்டும் என்னதான் இருந்தாலும் மணாமான இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தைப் பேற்றை உண்டாக்கி கொள்வது சிறந்தது.
குழந்தைப் பேற்றின்போது பெண்ணின் வயது 23 க்கும் 30 க்கும் இடைப்பட்டதாக இருத்தல் சிறப்பு நல்ல சிறப்பான நோயற்ற குழந்தைப் பேறு உறுதியாக வாய்க்கும்.
கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களின் எண்ணம் சலனமற்று எந்த உள போராட்டமும் இல்லமால் இருக்க வேண்டும் இந்தகாலத்தில் உண்டாகும் போராட்டங்கள் குழந்தையை பாதிக்க செய்யும் .மேலும் இந்த கருக்கலத்தில் பெண்கள் எந்த நோயும் வராமல் காத்து கொள்ளவும்.
நபி (ஸல்) இவ்வாறு வழி காட்டவே இல்லையே. அவர்கள் தான் எங்களுக்கு முன் மாதிரி
ReplyDelete