காய் வெட்டிய ரணில், கடுப்பாகியுள்ள இளம் சிங்கங்கள், கபீர் ஹசீம் ஓரங்கட்டப்படுகிறார்..?
-நஜீப் பின் கபூர்-
ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் செய்த சில நியமனங்கள் தொடர்பில் கட்சிக்குள் பெரும் முரண்பாடுகள் தோன்றி இருக்கின்றது. மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத சிலரை பிரதமர் ரணில் தனது தனிப்பட்ட நெருக்கம் காரணமாக உயர் பதவிகளைக் கொடுத்து அவர்களைக் கட்சியின் முக்கிஸ்தர்களாக காட்சிப்படுத்த எடுத்த முயற்சி கண்டனங்களுக்கு இலக்காகி இருக்கின்றது.
ஐ.தே.கட்சியின் எல்லாப் பதவிகளும் தயா கமகேக்கும் அவரது மனைவி மற்றும் அகில விராஜிக்கும், என்று ரணில் தீர்மானம் எடுத்துக் கொண்டிருக்கின்றார். இவர்களுக்கு தேசிய மட்டத்தில் எந்த அங்கிகாரம் கிடையாது. அத்துடன் புத்திக்க பத்திரன போன்ற செல்வாக்கான இளம் வயதுக்காரர்களை அவர் வழக்கம் போல் ஓரம் கட்டி வருகின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் கபீர் ஹசீம் அவர்களைச் செயலாளர் பதவியிலிருந்து வெளியேற்றி அந்த இடத்திற்கு அமைச்சர் அகில விராஜ்சை நியமிக்கும் திட்டமொன்றும் இருக்கின்றது என்று எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றது. இதற்காக தற்போது கபீர் ஹசீம் மீது திட்டமிட்டு ரணில் விசுவாசிகள் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்கள். மேலும் சஜித் பிரேமதாசவிடம் இருந்த பிரதித் தலைவர் பதவி பிடுங்கப்பட்டிருக்கின்றது.
ஒரு தேர்தலை எதிர் நோக்கி இருக்கின்ற இந்த நேரத்தில் ரணில் செல்வாக்கான ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களை தள்ளி வைத்துவிட்டு ஜனரஞ்சகம் இல்லாதவர்களை கட்சியின் முக்கியஸ்தர்களாக நாட்டுக்குக் காட்சிப்படுத்த முனைவது ஏன் என்று புரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் போராட்டக்கார பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ரஞ்சன் ராமநாயக்க தனக்கு கட்சி ஏன் பொறுப்பான பதவிகளைக் கொடுப்பதில்லை என்று ரணிலிடம் நேரடியாகக் கேட்டிருக்கின்றார். இதற்கு ரணில் அவசரப்பட வேண்டாம் என்று அவரிடத்தில் சொல்லிச் சமாளித்திருக்கின்றார்.
திரு ரணில் அவர்கள் ஒரு புத்திசாலி என தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு மடையர். இல்லையெனில் 2001 இல் கிடைத்த வாய்பை இரு வருடங்களுக்குள் இழந்திருப்பாரா ?
ReplyDeleteஇவரின் திட்டம் அடுத்த ஜனாதிபதி ஆவதே. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படாமல், திரு மைத்ரி அவர்கள் அடுத்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமலும் இருந்தால் ஜனாதிபதியாகலாம் என பிரதமர் மனப்பால் குடிக்கிறார். ஆனால் அவ்வாறு நடந்தால் அவரை விட முன்னால் ஜனாதிபதியே வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம். இதை முன்னால் ஜனாதிபதி அறிந்ததால் தான் இன்னும் ஓய்வு பெறாமல் சந்தர்ப்பம் வரும் வரை காத்து நிற்கிறார்.