"உலகின் மிகப்பெரும் பணக்கார பயங்கரவாத அமைப்பு'' உயிர் ஊசலாடுகிறது
போரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் வருவாய், 30 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.ஹெச்.எஸ். ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். அமைப்பு, "உலகின் மிகப் பெரும் பணக்கார பயங்கரவாத அமைப்பு' என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்கக் கூட்டுப்படைகளின் உதவியுடன் இராக் ராணுவமும், ரஷிய வான்வழித் தாக்குதலின் உதவியுடன் சிரியா ராணுவமும் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த நான்கிலொரு பங்கு நிலப்பரப்பை மீட்டனர்.
இதனால், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு முக்கிய நிதி ஆதாராமாக விளங்கும் எண்ணெய் வயல்களின் எண்ணிக்கை குறைந்ததால், கச்சா எண்ணெய் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 33,000 பேரல் எண்ணெய் உற்பத்தி செய்து வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், தற்போது 25,000 பேரல்களே உற்பத்தி செய்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றன. இதனால், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 சதவீதம் குறைந்தது.
கடந்த 2015-ஆம் ஆண்டு மத்தியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மாத வருவாய் 8 கோடி டாலராக (சுமார் ரூ.520 கோடி) இருந்தது. அது தற்போது 5.6 கோடி டாலராக (சுமார் ரூ.364 கோடி) சுருங்கிவிட்டது. இந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட, ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொதுமக்களிடமிருந்து மிக அதிக அளவில் வரி வசூல் செய்து வருகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
So these people have data from where ? It seems they them self have connection and communication with this group. Who is for Who ?
ReplyDelete