ஸ்டிக்கரைக் கண்டு முஸ்லிம்கள், அச்சம்கொள்ளத் தேவையில்லை - ‘சிங்ஹலே’
- ARA.Fareel-
சிங்ஹலே அமைப்பு இனவாதத்தைப் பரப்பும் இயக்கமல்ல. இந்நாட்டு மக்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று வேறுபடுவதை நாம் விரும்பவில்லை. நாட்டு மக்களை இன, மத ரீதியில் வேறுபடுத்துவதில் அரசியல் வாதிகளே முன்நிற்கின்றனர்.
‘சிங்ஹலே’ ஸ்டிக்கர்கள் பிரிந்திருக்கும் சிங்களவர்களை ஒன்றிணைப்பதற்காகவே ஒட்டப்படுகின்றன என ‘சிங்ஹலே’ அமைப்பின் செயலாளர் மெதில்லே பஞ்சாலோக தேரர் குறிப்பிட்டார்.
‘சிங்ஹலே’ முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் ஸ்டிக்கர் என தவறான கருத்து பரப்பப்டுவதை மறுப்பதாகவும் முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சு ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக தேசிய ஒருமைப்பாட்டினையும், நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான ஸ்டிக்கர்கள் வாகனங்களிலும், பொது இடங்களிலும் ஒட்டுவதற்கு தீர்மானித்திருக்கின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர்களை ஒட்டும் படி எமது அமைப்பு எவரையும் பலவந்தப்படுத்தவில்லை. நாட்டில் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கௌரவமும், சலுகைகளும் சிங்களவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சிங்களவர்கள் பிரிந்திருப்பதனாலே இந்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நாம் ஒன்றுபட்டு எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் நாம் ஒரு சமூகத்துக்கு எதிராக செயலில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுவது தவறு. நாம் மூன்று சமூகமும் ஒன்றுபட்டு வாழ வேண்டுமென்றே விரும்புகிறோம்.
ஆனால் அரசியல்வாதிகளுக்கு தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள இங்கு இன மத பிரிவுகள் தேவைப்படுகின்றன.
இலங்கையில் தேசியக் கொடி சிங்கக் கொடியாக ஒரே நிறத்தில் இருக்க வேண்டுமென நாம் கூறுகிறோம். தேசியக் கொடியில் சிறுபான்மையினருக்கு வேறு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளமை தவறாகும். நாம் அனைவரும் இலங்கையர் என்றால் தேசிய கொடியில் ஏன் எம்மை நாம் வேறுபடுத்திக் கொள்ள வேண்டும்.
தேசிய கொடியில் வாள் ஒன்றுடன் சிங்கம் காட்சிதருவதும் அங்கே சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்கள் உள்ளதும் சிங்கம் சிறுபான்மையினரை அடக்கியாள்வதாக அர்த்தம் கொள்ளலாமல்லவா?
இதே வேளை முஸ்லிம்களும் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். அதில் அரபு எழுத்துக்களும் வாள் ஒன்றும் இருக்கிறது. எமக்கு அரபு மொழி வாசிக்கவும் தெரியாது. ஆனால் நாம் அந்த ஸ்டிக்கர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறோமா இல்லையே.
அரசாங்கம் புதிய ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தி தேசிய ஒருமைப்பாட்டினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இந்த அரசியல் கலாசாரத்தில் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
முதலில் அரசியல் கலாசாரத்தில் மாற்றங்கள் உருவாக வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான தலைவராக சந்திரிக்கா அம்மையார் இருக்கிறார்.
அவரினால் நல்லிணக்கத்தை ஏற்படத்த முடியாது.
அரசியல் வாதிகள் சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதென்பதனாலே சிறுபான்மையினருக்கு கூடுதலான சலுகைகளை வழங்குகிறார்கள். நாட்டு மக்களனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றார்.
Sinhale is an extremist party. There is no any relationship between their brain and statement
ReplyDeleteThee are making story.goingto make fool entire comunity
ReplyDeleteThere is a Facebook page named "politicalgossip.lk" , its an extremist page of sinhale. All of therir post are against Muslims in Sri Lanka.
ReplyDeleteAlready We have a Muslimlay stickers so we don't want any lay stickers for what your sinhalay stickers for us. most of muslims and Tamils peoples can't speak singala language so our mother tongue is Tamil i love my country and my nation i am proud to say that i am Srilankan. We have complete rights in my country.
ReplyDeleteIf you talking equal rights all community,pls let us know how many persentage if Muslim working in all kind of government sector. Did we get equal persentage. Come on don't try make us fool
ReplyDelete