அமெரிக்க - பிரித்தானிய விவகாரங்களை உன்னிப்பாக அவதானிக்கும் ரணில்
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய விவகாரங்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து பிரித்தானியாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வஜன வாக்கெடுப்பு போன்றன குறித்து பிரதமர் விசேட கவனம் செலுத்தி வருவதாக எகனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் பிரித்தானிய சர்வஜன வாக்கெடுப்பு என்பன இலங்கைக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும் பொருளாதார விடயங்களில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலரி கிளின்ரன் வெற்றியீட்டுவதனையும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதும் நலிவடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் இலங்கைப் பிரதமர் இந்த இரண்டு சர்வதேச விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டுமென்றே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விரும்புகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய ஹிலரி கிளின்ரனுக்கும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கும் சுமூகமான உறவு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment