உதவுதல் என்பது, எத்தகைய உன்னதம் (வீடியோ)
இச்சிறிய குறும்படத்தைப் பார்க்குமாறு நட்புக்களுக்குச் சிபார்சு செய்கிறேன். உதவுதல் என்பது எத்தகைய உன்னதம்!
Faisan Hamsa //ஒரு ஷாப்பிங் மால்... ஒரு பாட்டியும் அண்ணன் தங்கை இரு குழந்தைகளும் வந்து பொருட்களை எடுக்கறாங்க...
குட்டிப்பெண் ரொம்ப ஆசையாக ஒரு கேக்கை..எடுக்கிறாள் . பில்போடும்போது பணம் குறைவாக இருப்பதால்...பாட்டி அந்தக்கேக்கை எடுத்து வைத்து விட்டு பில்லுக்கு பணம் கொடுக்கறாங்க..
எனக்கு அந்தக் கேக் வேணும்..
அடுத்த முறை வாங்கிக்கலாம்டா..செல்லம்..
போனமுறையும் இப்படித்தான் சொன்னிங்க....
இருக்கற பணத்துக்கு வேற ஏதாவது வாங்கிக்கோ...என்று அண்ணன் சொல்றான்..
அப்போது ஒரு இளைஞன்,
அந்தக் கேக்கை வாங்கி வந்து..அந்தக்குழந்தையிடம்
அன்புடன் கொடுக்கிறான்..
பாட்டி...மறுக்கிறார்கள்..
ப்ளீஸ்...இதை மறுக்காமல் வாங்கிக்கோங்க...
நான் சின்னப்பையனா இருந்தபோது..என் அம்மாவிடம் இதே போல் ஒரு நாள் என் பிறந்த நாளன்று கேக் கேட்டேன்..
இதேபோல..பணமில்லாத காரணத்தால் என் அம்மா என்னைச் சமாதானப்படுத்திய போது, ஒருவர் நான் கேட்ட அதே கேக்கை எனக்கு வாங்கிக்கொடுத்தார்..
எனக்கு அன்புடன் பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னார்...
என் அம்மா...நன்றி சொன்னார்..
நானும்...நன்றி சொன்னேன்..
அவர் சொன்னார்....
உன்னால் பிறருக்கு உதவி செய்யும். நிலை வரும்போது ஒருத்தருக்கேனும் அந்த உதவியைச் செய்வேன் என நீ எனக்கு உறுதியளித்தால் போதும் என்று..
வாங்கிக்கோங்க ப்ளீஸ்...
அந்தக்குழந்தை கேக்கை வாங்கிக் கொள்கிறது..
பாட்டி...அந்த இளைஞனிடம் உங்கள் முகவரியைக் கொடுங்கள் எனக்கேட்க..ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுக்கிறான்..
குழந்தைகள் சந்தோஷமாக...வீட்டிற்குள் சென்று..சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் தங்கள் தாத்தாவிடம் சென்று கேக்கைக் கொடுக்கிறார்கள் .
பாட்டி தாத்தாகிட்ட.கேக் வந்த கதையைச் சொல்லி, அந்த இளைஞன் கொடுத்த துண்டுச்சீட்டைத் தருகிறார்..
சீட்டைப் பிரித்துப் பார்த்த தாத்தாவின் முகத்தில் பெருமிதத்துடன் கூடிய புன்னகை மலர்கிறது..
ஆம்....அவர் முன்பு கேக் வாங்கித் தந்த அதே சிறுவன் தான் அந்த இளைஞன்..
குழந்தைகள் சந்தோஷமாக தாத்தாவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
"A simple act of caring creates an endless ripples. "// நன்றி: Selvi Shankar .
Abdul Haq Lareena
Post a Comment