Header Ads



சவூதி அரேபியாவிடம், யாரும் வாலாட்டுவதில்லை - காரணத்தை கூறும் டொனால்ட் டிரம்ப்

சவுதி அரேபியாவின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம், நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால் சவுதியிடம் யாரும் வாலாட்டுவதில்லை. ஆனால், இதற்கு நியாயமான கைமாறாக சவுதி நமக்கு ஒன்றுமே செய்வதில்லை என டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.

ஜப்பானும், கொரியாவும் தங்களது அணு ஆயுத உற்பத்தியை பெருக்கிக் கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும் என சமீபத்தில் குறிப்பிட்ட டிரம்ப், சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை தேடிக் கொண்டார்.

தற்போது, வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள 28 நாடுகளை சேர்ந்த அமைப்பான ‘நேட்டோ’ மீது சீறிப்பாய்ந்துள்ள டிரம்ப், இந்த அமைப்பே ’வீண்’ என்று குறிப்பிட்டுள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தில் ஆதரவு திரட்டிய அவர், முன்னர் செய்த குறைபாடுகளுக்கு அவர்கள் (நேட்டோ அமைப்பில் அமைந்துள்ள நாடுகள்) வருந்த வேண்டும், இல்லாவிட்டால் நேட்டோ அமைப்பையே கலைத்துவிட வேண்டும் என கூறினார்.

இதேபோல், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம், நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால் சவுதியிடம் யாரும் வாலாட்டுவதில்லை. ஆனால், இதற்கு நியாயமான கைமாறாக சவுதி நமக்கு ஒன்றுமே செய்வதில்லை. அவர்களுக்கு உதவிசெய்து, உதவிசெய்து நம்முடைய சட்டைதான் தளர்ந்துப் போகிறது (நாம் இளைத்துப் போகிறோம்) என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. சவுதியையும் அமெரிக்காவையும் இவர் போன்றவர்களையும் இறைவன்தான் பாதுகாக்கின்றான் என்பதை வெகு விரைவில் இவர் விளங்கிக்கொள்வார் .

    ReplyDelete
  2. There were more than seventy comments about Saudi recently
    on this forum . Where are they all ? The US talks about
    Saudi Arabia like never before ! I hope Mr Trump will very
    soon tell the Muslim world that " we are protecting Mecca
    for you to perform Umra and Haj."

    ReplyDelete
  3. Mr Trump , can you also tell us why Saudi is still a
    kingdom and not a democracy ? You can not say you
    are protecting Saudi and Saudis do not return the
    favour ! How is that ? Don't you sell all your
    outdated weapons to Saudi ? Who is Saudi's main trade
    partner ? Is Saudi not contributing to the IMF and the
    World Bank ? Middle East petrol dollars , where is it
    invested ? Mr Trump , why do you think all the wealth
    the Arbs have , failed to win the battle against
    Israel ?

    ReplyDelete

Powered by Blogger.