இந்த துணை பெண் விமானிதான் வேண்டும், இல்லனா விமானத்தை எடுக்கமாட்டேன்
விமானகள் மீது தாக்குதல், விமாங்கள் கடத்தல் என வான்வழிப் பயணம் பாதுகாப்பு இல்லாததாக மாறிவிட்ட நிலையில், ஏர் இந்தியா விமானி ஒருவர் ஒரு குறிப்பிட்ட துணை பெண் விமானிதான் என்னோடு வரவேண்டும் இல்லை என்றால் விமானத்தை எடுக்க மாட்டேன் என்று கூறிய சம்பவம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வழியாக மாலத்தீவுகளுக்குச் செல்வதற்காக ஏர்-இந்தியாவுக்கு சொந்தமான விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று(புதன்கிழமை) தயாராக இருந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 110 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்படும் நேரம் கடந்தும் விமானம் இயக்கப்படாமல் காலதாமதமானது. அப்போது, அதிகாரிகள் விமானியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சக பெண் விமானி இல்லாமல் தன்னால் விமானத்தை இயக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுமார் 2 மணி நேரம் விமானத்தின் புறப்பாடு காலதாமதமானது.
குறிப்பிட்ட சக பெண் விமானி இருந்தால்தான் விமானத்தை இயக்குவேன் என்று தெரிவித்த தலைமை விமானியின் செயலை மன்னிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்திரடப்பட்டுள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment