முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை, கருணாநிதியுடன் ஒப்பிட்டு பேச்சு - கண்டன போராட்டத்திற்கு அழைப்பு
அமெரிக்காவில், டென்மார்க்கில், பிரான்ஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தியதற்கு தமிழகத்தில் அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் வீதியில் போராட்டம் நடத்தின.
ஆனால் தமிழகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கருணாநிதியுடன் ஒப்பிட்டு அதனால் தான் மமக, முஸ்லிம் லீக், SDPI கட்சிகள் அறிவாலயம் வந்ததாக கூறி நபிகள் நாயகம் (ஸல்) இழிவுப்படுத்தியுள்ள நிலையிலும் மமக, முஸ்லிம் லீக், SDPI ஆகிய கட்சிகள் மௌனம் காத்து வருகின்றன.
யாரென்றே தெரியாத வெளிநாட்டினரை கண்டித்து போராட்டம் நடத்தினால் எதிர் தாக்குதல் வராது,
உள்நாட்டில் திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தினால் எதிர்தாக்குதல் என்ற பெயரில் கொடுத்த 5 சீட்டுக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வார்களோ அல்லது திமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்களோ என்ற அரசியல், பதவி அச்சத்தின் காரணமாக மௌனம் காப்பதாகவே கருத முடிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தியும் வாய் திறக்காவிட்டால் வேறு எப்போது வாய் திறப்பீர்கள் ?
நமது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி நமக்கு இந்த அரசியல் பதவி தேவையா என்று இந்த தருணத்தில் சிந்திக்க வேண்டும்.
இல்லையென்றால் நபிகள் நாயகம் இழிவுப்படுத்தப்பட்டும் இக்கட்சிகள் வாய் திறக்காத போது நமக்காகவா இக்கட்சிகள் வாய் திறக்கப்போகிறது என்று மக்கள் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள்.
திமுகவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்....!!
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கருணாநிதியுடன் ஒப்பிட்டு திமுக பேச்சாளர் நாகராஜன் பேசியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் முஹம்மது யூசூப் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிம்களிலேயே மிகப்பெரிய மகானையும் கூட அல்லாஹ்வின் தூதர் என்று எந்த முஸ்லிமும் நம்ப மாட்டார் நம்பக் கூடாது. இந்த நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் கருணாநிதியை இறைத்தூதர் என்று இந்தக்கயவன் பேசியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.
முஸ்லிம் சமுதாயத்தில் இறை நம்பிக்கையாளருடன் கூட கருணாநிதியை ஒப்பிட முடியாது எனும் போது நபிகள் நாயகம் போல் இறைத்தூதர் என்று கூறுவது முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாகும்.
அல்லாஹ்வின் தூதர் என்பதைத்தவிர்த்து நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், நாணயம், நேர்மை ,தியாகம், தன்னலமற்ற வாழ்வு அரசியல் என்று எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் கருணாநிதியோ மற்ற அரசியல் வாதிகளோ நபிகள் நாயகத்தின் கால் தூசுக்கு சமமானவர்களாக ஆகமுடியாது என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையைக் கேலிக்கூத்தாக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
நபிகள் நாயகம் விஷயத்தில் முஸ்லிம்கள் கடுகளவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது உலகமே அறிந்து வைத்துள்ள உண்மையாகும்.
இதைக்கூட உணராமல் நாகராஜ் என்பவன் பேசியுள்ளதைக் கருணாநிதி கடுமையாக கண்டிக்க வேண்டும், தவறினால் கடுமையான விளைவுகளை திமுக சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கிறோம்.
மேற்கண்டவாறு முஹம்மது யூசுப் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தெளஹீத் ஜமாத்தின் போட்டி அமைப்புகள் கருணாநிதியுடன் இருப்பதாலும், இவர்கள் ஜெயலலிதாவுடன் இணைந்து இருப்பதாலும், விரைவில் தேர்தல் நடக்க உள்ளதாலும் TNTJ செய்யும் கேவலமான அரசியலே இது, இதனை முஸ்லிம்கள் கண்டுகொள்ளத் தேவையில்லை, குறிப்பாக, இலங்கை முஸ்லிம்கள் இதில் அக்கறை காட்டத் தேவையே இல்லை. இது அவர்களின் அரசியல், அரசியலுக்காக யாரை வேண்டுமானாலும் விற்பார்கள்.
ReplyDeleteWhy not limit the criticism to the speaker, rather than generalizing to the whole party? Again I sense some cheap publicty?
ReplyDeletethis so called TAWHEED group is playing game with political parties , Exploiting the islam and prophet for this game, May Allah Protect our Umma from these Business Groups.
ReplyDeleteதமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் சில போராட்டங்களை முன்னெடுத்து பல சாதனைகளை, நன்மைகளை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. இதில்;
ReplyDelete1. விஸ்வரூபம் படத்திற்கு எதிராக நின்று அவர்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்தி சினிமா, பத்திரிகை, ஏனைய செய்தி ஸ்தாபனங்களின்; முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயமான பொய்யான, காடைத்தனமான விமர்சனங்களைக் குறைத்தமை.
2. இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் இந்திய முஸ்லிம்களின்
நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்,
இருப்பிடத்திற்க்கான நில ஒதுக்கீடு,
அரசாங்கத்தில் தொழில் பெற்றுக் கொடுத்தல்.
போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருவது.
3. எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னையில் கடந்த 2015 டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கற்ற்பனையில் கூட எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு உதவிகளைச் செய்தது. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் பற்றி அந்நிய மதத்தவர்களின் உள்ளத்திலிருந்த தப்பான எண்ணங்களை, பின்னூட்டல்களை, கறைகளைக் கொஞ்சமேனும் துடைத்து எறிந்தமை.
இன்னும் பல உண்டு, குறிப்பிட்டவை என் மனதில் நின்றவை.
எனவே;
இவர்களின் நல்ல பணிகளை; எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக. நேர்வழி எதுவோ, அதில் இவர்களை ஓட்டிச்செல்வானாக. தீயவற்றிலிருந்து அனைவரையும் காப்பானாக. ஆமீன்.
விமர்சிப்பது இலகுவானது ,,,,,,,,,,,,
களத்தில் நின்று செயல்படுவது சிரமமானது ,,,,,,,,,,
பிரார்த்திப்போம், நல்லவைகள் நடப்பதற்கு.
நபி முஹம்மத் ஸள்ளல்லாஹ் அலைஹிவஸல்லம் ஸலாம் அவைகளைப்பற்றியும், அவர்கள் மூலமாக அல்லாஹ்வால் மீண்டும் தரப்பட்ட இஸ்லாத்தைப்பற்றியும், இந்தியாவின் புகழ்மிக்கவர்களான காந்தி, சரோஜினி நாயுடு போன்றோரே ஏற்கனவே வியந்து புகழ்ந்து, கருத்துக்கூறியிருக்கும் நிலையில்.... தமிழ்நாட்டு மக்களை (வீட்டுக்கு வீடு TV கொடுத்து) சினிமாவுக்குள்ளேயே வாழ்க்கை என்று படுமுட்டாள்களாக ஆக்கிக்கொண்டு "பொல்லூண்டிக்கொண்டே" பதவியைத்தேடும் பக்கா பேராசைக்காரன், தமிழ்நாட்டு அரசியலை சாக்கடை அரசியலாக்கியதில் முக்கிய பங்கு வகித்த இந்த கருணாநிதியை நபிகளாருக்கு ஒப்பிட்டவன் "அகக் கண்கள்தான் இல்லாவிட்டாலும் புறக் கண்களாவது இல்லாத குருடனா?
ReplyDeleteஆக, இது நிச்சயமாக "காழ்ப்புணர்ச்சியினால்".. முஸ்லிம்களை குழப்ப மேற்கோள்ளப்பட்ட ஒரு இனவெறி செயலேயாகும். இதற்கெதிராக முஸ்லிம்கள் (நாகரீகமாக) குரல்கொடுப்பது கடமையாகின்றது.
As I know Hareen Aadam..doing big bisiness....!!! but talking non-sense again Tawheed......
ReplyDeleteAday kuruttuppayale.....do you know what is the meaning of Tawheed....R u muslim??
Oneandonly Forever உடைய கருத்துக்களை பார்த்தாலே புரியும், இந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம். மோடிக்கு சவூதி அரசு உயர் விருது வழங்கி இருக்கின்றது, சவூதி தூதரகத்தை முற்றுகை இட்டு போராடுவார்களா? கருணாநிதியை எதிர்ப்பது உள்ளூர் அரசியலுக்காகவே.
ReplyDeleteகடந்த முறை கருணாநிதியை எதிர்த்து, ஜெயலலிதாவை ஆதரித்த பொழுது, "பெண்கள் தலைமை ஏற்பது இஸ்லாத்திற்கு முரண்" என்று ஹதீசுடன் போஸ்ட் போட்டார்கள், (போஸ்ட் என்னிடம் இப்பொழுதும் உள்ளது) ஆனால் ஜெயலலிதா அமோக வெற்றிபெற்றார். இம்முறை ஜெயலலிதாவை ஆதரிப்பதால், கருணாநிதிக்கு எதிராக் ஹதீஸ் இல்லை என்பதால், இப்படி ஒரு நாடகம். அல்லாஹ் தமிழக முஸ்லிம்களை இந்த நாடகத்தில் இருந்து பாதுகாக்கட்டும்.