Header Ads



மகளை காப்பாற்ற, உயிரிழந்த தந்தை

அமெரிக்காவில் உள்ள கடற்கரையில் உயிருக்கு போராடிய 6 வயது மகளை காப்பாற்ற அவரது தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் வில்லியம் மோரிட்ஸ்(28) என்பவர் தனது மனைவி மற்றும் மேடி என்ற 6 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் உடல்நலக் கோளாறு காரணமாக வில்லியமின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு வில்லியம் அருகில் இருந்தJacksonville என்ற கடற்கரைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

காலை சுமார் 10.45 மணியளவில் அனைவரும் கடலில் உற்சாகமாக குதித்து விளையாடியுள்ளனர்.

அப்போது, ராட்சத அலை ஒன்று வேகமாக வந்து வில்லியமின் மகளான மேடியை கண் இமைக்கும் நேரத்தில் கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வில்லியம் மகளை மீட்க, அந்த ராட்சத அலையை பின் தொடர்ந்து வேகமாக சென்றுள்ளார். அப்போது தந்தை, மகள் என இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்த சமயத்தில் அங்கு கூடியிருந்தவர்கள் வேகமாக கடலில் குதித்து நீரில் மூழ்கியிருந்த இருவரையும் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், இருவரையும் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மகள் பிழைத்துக்கொள்ள தந்தையான வில்லியம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மகளை காப்பாற்ற தந்தை உயிரிழந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.