Header Ads



"இது இதயமே இல்லாத விளம்பரம்"


ஈஜித்ஏர் நிறுவன விமானம் கடத்தப்பட்டதை பயன்படுத்தி எகிப்தைச் சேர்ந்த பயண முகவர் நிறுவனம் விளம்பரம் தேடி மக்களிடம் திட்டு வாங்கியுள்ளது.

எகிப்து உள்ளூர் பயணிகள் விமானத்தை சயிப் எல் தின் முஸ்தபா என்பவர் போலி தற்கொலை அங்கியுடன் சைப்ரஸ் நாட்டுக்கு கடத்திச் சென்றது சமூக தளங்களில் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எகிப்தைச் சேர்ந்த பயண முகவர் நிறுவனமான லயன்ஸ் ட்ரிப்ஸ், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தீக்கும் விளம்பரமே மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அந்த விளம்பரத்தில் கூறியிருப்பதாவது, “எங்கள் நிறுவனம் மூலமாக ஹர்கடாவுக்கு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்... கடத்தல்காரர் யாராவது உங்களை சைப்ரஸுக்கு அழைத்துச் செல்லக்கூடும். இல்லை என்றால் பிரான்ஸ் அல்லது இத்தாலிக்கு கூட அழைத்துச் செல்லக்கூடும்” என்று அரபு மொழியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லயன்ஸ் ட்ரிப்ஸின் இந்த விளம்பரத்தைப் பார்த்த மக்கள் கோபம் அடைந்து அதை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது இதயமே இல்லாத விளம்பரம் என்று பலரும் தெரிவித்துள்ளனர். விமானத்தைக் கடத்திய முஸ்தபா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதோடு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சைப்ரஸ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.