Header Ads



கவ்பாவில் தற்காலிக பாலம் அகற்றும் பணி ஆரம்பம்


புனித கஃபாவை வலம் வருவதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை அகற்றும் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை வரும் மே 27இல் பூர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கா பெரிய பள்ளிவாசலின் விரிவுபடுத்தும் பணியின்போது அங்கு ஒன்றுகூடும் யாத்திரிகர்களின் நெரிசலை குறைக்கவே கடந்த 2013 ஓகஸ்ட்டில் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் அமைக்கப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகி இருப்பதாகவும் அது அகற்றப்படும் நேரம் வந்துவிட்டதாகவும் கஃபாவை வலம்வரும் பகுதியின் தொழில்நுட்பக் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த பணிகள் புனித ரமழானுக்கு முன்னர் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கஃபா வலம்வரும் பகுதியின் விரிவுபடுத்தும் பணிகள் பூர்த்தியாகி இருக்கும் நிலையிலேயே இந்த பாலம் அவசியமற்றதாகியுள்ளது. கஃபாவை வலம்வரும் பகுதியில் விரிவாக்கல் பணிகளுக்கு பின்னர் அங்கு மணிக்கு சுமார் 107,000 யாத்திரிகர்களுக்கு கஃபாவை வலம்வர முடியுமாக இருக்கும். 

No comments

Powered by Blogger.