லசித் மலிங்கவின் எதிர்காலத்தை, நான் சீரழிக்கமாட்டேன் - அரவிந்த டி. சில்வா
சேவ் த ஸ்போர்ட்ஸ் விளையாட்டு நிறுவணத்தினால் ஏற்பாடுச் செய்யப்பட்ட ' இலங்கை கிரிக்கெட் மற்றும் விளையாட்டின் எதிர்க்காலம்' மவ்ரட்ட கருத்தரங்கு இன்று (05) காலை 11.00 மணிக்கு தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது. முன்னாள் டெஸ்ட் அணியின் தலைவர் அர்ஜீன ரணதுங்க தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா முன்னாள் துனை கிரிக்கெட் அத்தியட்சகர் கே.எஸ்.பீரிஸ் தேசிய விளையாட்டு பீடத்தின் அத்தியட்சகர் சஜித் ஜயலால் பேராதனை பல்கலைக்கழக உடற்கூற்றியல் பேராசிரியர் அனுஜ மல்லவராச்சி மற்றும் தேசிய கிரிக்கெட் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ரொஹான் பெரேரா ஆகியோர் கலந்துக்கொண்டார்கள். இந்நிகழ்வின் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் மேற்கொண்ட முடிவின் தொடர்பாக லசித் மாலிங்க கடுமையாக விமர்சித்துள்ளார் அது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
உண்மையாகவே அவர் தலைவராக செயற்பட்ட பொழுது நான் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கவில்லை. விருதொன்றை வழங்கும் பொருட்டு வங்காளதேசத்திலிருந்து எனக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பை ஏற்று நான் அந்நாட்டிற்கு சென்றிருந்தேன். உண்மையாகவே அவ்வாறான பிரச்சினையொன்று இல்லையென கூறுவார்களாயின் அது தொடர்பாக நீங்கள் தேடிப்பார்க வேண்டும்.
கிரிக்கெட் என்பது ஒரு குடும்பம் போன்றதாகும் எனவே அங்கு நடைப்பெறுகின்ற பிரச்சினைகளை வெளியில் சொல்வதற்கு நான் ஒரு பொழுதும் விரும்பியதில்லை. ஒரு புறமிருந்துக்கொண்டு நான் ஒரு பொழுதும் அழுத்தங்களை பிரயோகித்ததில்லை. கூறவேண்டியவற்றை முகத்திற்கே சொல்லிவிடுவேன். அது போன்றே அணியினால் அழுத்தங்கள் காரணமாக சரியான. முறையில் விளையாட முடியவில்லையாயின் அதற்கும் சந்தர்பங்களை வழங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. அப்பிரச்சினையில் தலையிட்டே நான் முடிவுகளை எடுத்தேன். அது மற்றவர்களின் முடிவல்ல. ஒரு சில வேளைகளில் வீரர்கள் சரியான பக்கத்தில் இருப்பவர்கள் நாம் கூறுவதை கேட்டுவிட்டு அவர்களின் பக்கம் தலைசாய்ப்பார்கள். சரியானதை செய்வதற்கு யாரிற்கும் மண்டியிட வேண்டியதில்லையென நான் நினைக்கின்றேன். மனசாட்சிக்கு ஏற்றவகையில் முடிவுகளை மேற்கொள்ள அச்சங்கொள்ள தேவையில்லை. நான் நீண்ட காலம் சேவையாற்ற இப்பொறுப்பை ஏற்கவில்லை. என்னை போகச் சொன்னால் நான் செல்வேன் ஏனெனில் நான் உதவிச்செய்யவே வந்துள்ளேன். நாட்டிற்காக சேவையாற்றவே இப்பொறுப்பினை ஏற்றேன்.
அவர் அனுப்பிய மின்னஞ்சலில் உண்மை பொய் உள்ளடங்கியுள்ளது. என்னால் அவருக்கு எவ்வித பிரச்சினைகளும் நேராது. அவர் பல வருடங்களாக நாட்டின் பொருட்டு விளையாடியுள்ளார். எனவே கிரிக்கெட் விளையாடுமாறு நான் அவர்களுக்கு கூறினேன். அவருக்கு நல்லதொரு எதிர்காலமொன்றுள்ளது. அவரது எதிர்காலத்தை ஒரு போதும் சீரழிக்க மாட்டேன் ஏனெனில் அப்பிள்ளைக்கு எதிர்க்காலமொன்றுள்ளது.
please post the full speech of him.this is not full filled.
ReplyDelete