Header Ads



இது ஒரு, பயந்த அரசாங்கம் - நாமல் ராஜபக்ச

நாடு புத்தாண்டை கொண்டாட தயாராகி வரும் நேரத்தில் நாட்டில் சமாதானத்தை கொண்டு வந்த படையினர் சிறை சோறு சாப்பிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் முன்பள்ளியில் இன்று -04-  நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெடி குண்டை கொண்டு வந்த பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்தாது, அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் நேரத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டு வருகிறது.

எனினும் கடந்த காலங்களை போல் இம்முறை கிராமங்களில் இருக்கும் எமது பெற்றோருக்கு புத்தாண்டை விமர்சியாக கொண்டாட வழியில்லை.

மக்கள் சக்திக்கு பயந்த அரசாங்கம் பெறுமதி சேர் வரி அதிகரிப்பை நிறுத்தி விட்டது. எனினும் இது தற்காலிகமானது.

சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புகள் மற்றும் அரசாங்கத்தின வங்குரோத்து நிலைமையை உறுதிப்படுத்தவுமே அரசாங்கம் பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்க முயற்சித்து வருகிறது.

கிராமங்களில் தற்போது மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு தமது நெல்லை விற்பனை செய்து கொள்ள முடியாதுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸிடம் இரண்டு மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

படித்த புத்திசாலியான அவர் போன்றோரையும் இவ்வாறு அவமதிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அப்படி செய்யக் கூடாது. அரசாங்கத்திற்கு அடிப்படையில்லை. திட்டங்கள் இல்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. When did you come for politics???

    ReplyDelete
  2. Did you consider about the families which was effected as like that under your regime government. This is the time for you to feel really

    ReplyDelete
  3. Yes that is the reason they did not arrest you

    ReplyDelete

Powered by Blogger.