கிறிஸ் கெய்லும் மேற்கிந்திய கிரிக்கெட் போர்ட்டை விளாசுகிறார்..!
டேரன் சமி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தை பற்றி வெளிப்படையாக பேசியதற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆதரவு அளித்துள்ளார்.
டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
அவர் கூறுகையில் “நாங்கள் இப்போது அணிந்துள்ள அணிக்கான சீருடை வாங்கி தருவதில் கூட நிர்வாகம் குளறுபடி செய்தது.
இதனால் ஒட்டு மொத்த அணி சீருடை வாங்கவும் நான் தான் கடன் கொடுத்து உதவினேன்” என்று கிரிக்கெட் வாரியத்தின் அவலங்களை போட்டு உடைத்தார்.
இந்நிலையில் டேரன் சமி கிரிக்கெட் வாரியத்தை பற்றி பேசியது 100 சதவீதம் சரியானது என்று சக வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக இண்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ”டேரன் சமி கிரிக்கெட் வாரியத்தை பற்றி பேசியதற்கு நான் 100 சதவீதம் ஆதரவு அளிக்கிறேன். நாங்கள் சிரமப்படுவது உண்மை தான்.
டேரன் சமி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் நான் ஓய்வு பெறவில்லை. இருப்பினும் டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு என்னை தெரிவு செய்ய மாட்டார்கள்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இந்த ஆண்டு விளையாடும் கடைசி போட்டி இது தான் என்று நினைக்கிறேன். 2017ம் ஆண்டு மீண்டும் ரசிகர்களை பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.
மேலும், நல்லவேளையாக பரிசுத் தொகை கிடைத்தது. கிரிக்கெட் வாரியம் ஊதியம் தருவதாக கூறிவது எல்லாம் ஒரு கொமடி, அதனால் நான் எனது ஊதியத்தை நல்ல காரியங்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Post a Comment