Header Ads



ஒரு கட்சியின் பொதுச் செயலாளரை, பதவி நீக்குவதில்..?

-Inamullah Masihudeen-

சமரசம் இன்றேல், முஸ்லிம் காங்கிரஸ் நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை தேர்தல் ஆணையாளரால் முடக்கப்படும்.

ஒரு கட்சியின் பொதுச் செயலாளரை பதவி நீக்குவதில் ஏதேனும் சர்ச்சைகள், சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் இருப்பின் அது தொடர்பாக இரு சாராரும் தேர்தல் ஆணையாளரை சந்தித்து தீர்வு ஒன்றைக் கோர முடியும்.

கட்சி அல்லது கட்சியின் தலைமை பேராளர் மாநாட்டினூடாக அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையின் பெயரில் செயலாரை பதவியில் இருந்து நீக்கியமை குறித்து தனது தனது நியாயாதிக்க அதிகாரத்தை வைத்து தேர்தல் ஆணையாளர் ஒரு தீர்வை சொல்லுவார்.

அல்லது, பிரச்சினையை சுமுகமாக தமக்குள் தீர்த்துக் கொள்ளுமாறோ நீதி மன்றம் செல்லுமாறோ இரண்டு தரப்பினரையும் வேண்டிக் கொள்வார்.

அவ்வாறான ஒரு நிலைவரின் தற்காலிகமாக கட்சியின் சட்டபூர்வமான செயற்பாடுகள் தேர்தல் ஆணையாளரினால் இடை நிறுத்தப் படும், சுமுகமாக விவகரம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை அல்லது நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கட்சியின் சின்னத்தை பெயரை மற்றும் அதிகாரங்களை எந்தவொரு தரப்பும் பயன் படுத்த முடியாது.

அதுவரை கட்சியிற்கு இரண்டு தரப்பினரும் உரிமை கொண்டாடவும், அறிக்கைகள் விடவும் மாநாடுகள் நடாத்தவும், கட்சிக் கூட்டங்களை நடாத்தவும் இடைக்கால தடை உத்தரவு பெறப்படாதவரை எந்தவித தடையும் இல்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடனடியாக தற்பொழுது தலைவர் செயலாளருக்கிடையே தோன்றியுள்ள முறுகல் நிலையை தீர்த்துக் கொள்ளாவிடின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் செயலாளருக்கிடையே தோன்றியுள்ள இழுபறி நிலையே அங்கும் ஏற்படும் எனபதில் சந்தேகமில்லை.

நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு வரையப்படுகின்ற வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு தருணத்தில் முஸ்லிம் அரசியல் குழுக்கள் கட்சியின் யாப்பு, பதவி அந்தஸ்து அதிகாரங்கள் குறித்த அபத்தமான சர்ச்சைகளில் ஈடுபட்டிருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

மூன்றாவது குடியரசு அரசியமைப்பு வரையப்படுவதற்காக நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க தருணத்தில் உள்வீட்டு பூசல்களை கைவிட்டுவிட்டு ஒன்றிணையுமாறு எனது முன்னாள் அரசியல் பாசறை சகாக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.

1 comment:

  1. Inamullah Sir..., இந்த இருவருமே ( R H & R B ) நீங்கள் கூறும் வட்டத்துக்குள் இல்லை. முஸ்லிம்களுக்கு மாற்று மத அரசியல் வாதிகளை விட இந்த இரண்டு நபர்களினால் தான் பெரும் பாதிப்பு இருக்கிறது. முடிந்தால் முஸ்லிம்களை முஸ்லிம்களை இவர்களிடம் இருந்து காப்பாற்றி கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.