"குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவே, மஹிந்த மக்கள் முன் தோன்றுகிறார்"
மஹிந்த ராஜபக்ஷ தனது உறவுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே மக்கள் மத்தியில் தோன்றுகிறாரே தவிர அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்காக அல்ல எனத் தெரிவித்துள்ள சுகாதார மற்றும் தேசிய வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜெனீவா செல்லும் பொது எதிரணியினர் தொடர்பிலும் நல்லாட்சி தொடர்பாகவும் ஜெனீவா அதிகாரிகளுக்கு நன்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சுகாதாரத் துறைக்கான தலைமைத்துவப் பயிற்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றும் போது,
ஜனநாயகத்தை பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் எவரும் பொது எதிர்க்கட்சியின் கதைகளுக்கு ஏமாறமாட்டார்கள். தமிழ், சிங்கள புதுவருடத்திற்கு முன்பதாக அரசாங்கத்தை கவிழ்ப்போம் என பொது எதிரணியினர் கூறுகின்றனர். ஆனால் இவர்களால் அரசை கவிழ்க்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு வேலைத் திட்டம் எதுவும் கிடை யாது.
மஹிந்த ராஜபக்ஷ தமது குடும்பத்தினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே மக்கள் மத்தியில் தோன்றுகிறாரே தவிர அரசாங்கம் ஒன்று அமைப்பதற்காக அல்ல. நாட்டின் பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.
2014ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான தற்கொலை அங்கிகள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டவைகளே இவ்வாறு வெளிவருகின்றன. இதில் ஆபத்தெதையும் நான் காணவில்லை.
ஜெனிவாவில் உள்ளோர் பொது எதிர்க் கட்சியினர் தொடர்பாக நன்கறிவார்கள் அதேபோன்று நல்லாட்சி தொடர்பாகவும் நன்கறிவார்கள்.
எனவே, ஜனநாயகம் என்பது என்ன வென்று தெரிந்த வர்களை பொது எதிர்க்கட்சியினரால் ஏமாற்ற முடியாது என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனா ரத்ன தெரிவித்துள்ளார்.
Welcome back to action
ReplyDeleteWhat u trying to say? If the Saudi according to your argument is the bone for all the fithns then, what country else is recognized to practise real Islam in the present world?
ReplyDeleteWhat has happened to Tajudeen's case?.Stop telling the stories.
ReplyDelete