அல்குர்ஆனை முழுமையாக மனம்செய்த ஹாபில், உங்கள் உதவியை நாடுகிறார்
புத்தளம் புளிச்சாக்குலத்தின் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 30 வயதான முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் இம்தியாஸ் அவர்கள் இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் அவதியுறுகிறார். இவர் கொழும்பு வெல்லம்பிட்டிய தாருல் உலூம் அல் ஹுமைதியா அரபுக்கலாசலையில் பட்டம்பெற்று வெளியேறிய ஒரு ஆலிம் ஆவார். அத்தோடு 22 வயது மனைவிக்கும் ஒரு வயது பெண் குழந்தைக்கும் பாதுகாவளாராக உள்ளார். அத்தோடு புனித அல் குர்ஆனை முழுமையாக மனம் செய்த ஒரு ஹாபில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 9 வருடங்களாக நீர்கொழும்பு தாருல் புர்கான் அரபு மத்ரஸாவில் 9000.00 சம்பளத்திற்கு உஸ்தாதாக கடமையாற்றிக்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் இவருடைய சிறு நீரகங்கள் செயலிழந்திருப்பது வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. அந்நாளிலிருந்து மருத்துவம் செய்து வரும் இவர் தொடர்ந்தும் உடல் நிலை தேராத நிலையில் (தொழில் செய்ய இயலாத காரணத்தால்) தற்போது தொழிலையும் விட்டு விட்டு வீட்டிலேயே இருக்கிறார்.
இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு 1500,000.00 (பதினைந்து இலட்சம்) செலவாகும். தற்போது குறிப்பிட்ட ஒரு சில தனவந்தர்களால் 225,000.00 வழங்கப்பட்டுள்ளது. மீதித்தொகையையே இவர் தனவந்தர்களிடம் எதிர்ப்பார்த்து நிற்கின்றார்.
இந்த ஆலிம் ஒருவரிற்கு உதவி செய்து மறுமையிலும் இம்மையிலும் நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களது வாழ்கையில் அருள்பாளிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்!.
· Address:
Mou. M. I. M Imthiyaz (Humaidhi)
No: 27,
Puthukudiyiruppu,
Bathulu oya,
Puttalam.
· Blood group: AB +
· Contact no: 0702055480, 0773000125
· Bank Account :
0110159623001
Mohamed Ismail Mohamed Imthiyaz
Amana bank – Negombo Branch
· Further detail:
U. H. M Ismail (Father)
0719243829.
May Allah give saber and pation to this brother and his family and make easy for their hardship thire going through.
ReplyDelete