Header Ads



நாமலிடமிருந்து அச்சுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அச்சுறுத்தியதாக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் அரசியல்வாதியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹிக்கடுவ பிரதேச ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்றின் போது நாமல் ராஜபக்ஸ, தம்மை அச்சுறுத்தியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர் திசர குணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் அரசியல்வாதி அமரர் நந்த குணசிங்கவின் புதல்வரே திசர குணசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசாங்க உறுப்பினர்களை ஓரம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் மீளவும் ஆட்சிக்கு வந்தால் தம்மையும் இந்த அரசாங்கத்தையும் அழிப்பதாக நாமல் எச்சரிக்கை விடுத்தார் எனவும் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.
 

1 comment:

  1. வாடா வாடா....வா....! உன்ன, உன் அப்பன எதிர்க்க நீயே படைய உறுதிப்படுத்துறாய்...

    ReplyDelete

Powered by Blogger.