Header Ads



ஹஜ் - உம்ரா முக­வர்­க­ள், வேலை வாய்ப்பு முக­வர்­க­ளா­கவும் செயற்­ப­டு­வது சிறந்­த­தல்ல

(ARA.Fareel + விடிவெள்ளி)

ஹஜ், உம்ரா முக­வர்­க­ளாகப் பதிவு செய்து கொண்­டுள்­ள­வர்கள் வெளி­நாட்டு வேலை வாய்ப்பு முக­வர்­க­ளா­கவும் செயற்­ப­டு­வது சிறந்­த­தல்ல என ஹஜ் குழு கருதுவதாக அமைச்சர் ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ளரும், ஹஜ்­குழு உறுப்­பி­ன­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்தார்.

இதேவேளை, முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து ஹஜ் உம்ரா முகவர் நிலைய அனு­ம­திப்­பத்­தி­ரத்தை மாத்­திரம் பெற்­றுள்ள முகவர் நிலை­யங்கள் பெண்­களை வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பு­க­ளுக்­காக அனுப்­பினால் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கமே அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்லிம் சமய மற்றும் தபால் அமைச்­சினால் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது எனவும் அவர் தெரிவித்தார். 

அண்­மையில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யக அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்ட ஹஜ் உம்ரா முகவர் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

 சில ஹஜ் உம்ரா முக­வர்கள், வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­ய­கத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்டு அதற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்தைப் பெற்று வெளி­நாட்­டுக்கு தொழி­லா­ளர்­களை அனுப்­பு­கி­றார்கள். இவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. 

ஹஜ், உம்ரா முக­வர்­க­ளாகப் பதிவு செய்து கொண்­டுள்­ள­வர்கள் வெளி­நாட்டு வேலை வாய்ப்பு முக­வர்­க­ளா­கவும் செயற்­ப­டு­வது சிறந்­த­தல்ல என்றே ஹஜ் குழு கரு­து­கி­றது. இந்த விவ­கா­ரத்தை எவ்­வாறு கையாள்­வது என்­பது குறித்து கடந்த காலங்­களில் பேச்­சு­வார்த்தை நடாத்­தப்­பட்­டுள்­ளது. இது பற்றி தொடர்ந்து ஆராய்ந்து வரு­கி­றது இது ஒரு சட்­டப்­பி­ரச்­சி­னை­யாகும் என்றார். 

இதே­வேளை ஹஜ், உம்ரா முகவர் நிலைய அனு­ம­திப்­பத்­தி­ரத்தை மாத்­திரம் பெற்­றுள்ள மரு­தா­னையைச் சேர்ந்த முகவர் ஒருவர் வெளி­நாட்­டுக்கு பெண்­களை பணிப்­பெண்­ணாக அனுப்ப முயற்­சித்த போது வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யக விஷேட விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வா­றான மோசடிகளில் ஈடுபடும் முகவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஹஜ் உம்ரா என்பது வணக்கம் என்பதை தாண்டி, பெரும் வியாபாரமாகவே மாறிவிட்டது. இல்லாவிட்டால் ஞானசாரரிடம் சென்று இருப்பார்களா?

    உம்ராவை ஊக்குவித்து ஜும்மா கொத்பா செய்வதற்கு சில காலங்களில் சில மவ்லவிகளுக்கு விசேட கொடுப்பனவுகள் இந்த ஏஜெண்டுகளால் வழங்கப்படுகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.