அதிபர் தும்புத்தடியால் தாக்கியதில் ஆசிரியையும், மகளும் காயம்
விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அதிபரின் அறைக்கு சென்ற ஆசிரியையை, அதிபரொருவர் தும்புத்தடியால் தாக்கிய சம்பவமொன்று பாணந்துறையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மஹாநாம வித்தியாலயத்தின் அதிபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஆசிரியையின் பிள்ளையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment