Header Ads



கபீர் ஹாசீமின் பதவி பறிபோகும், சந்திரிக்கா காலாவதி, ரணில் எதிரி - டிலான்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கியப்படுத்த வேண்டிய முறை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, படுவஸ்நுவரவில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டார்.

அவர் தெரிவித்ததாவது,

எமது கட்சியை ஒன்றிணைத்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் எழுந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்கான காரணிகள் என்ன? ரணில் விக்ரமசிங்கவின் காரணிகள் அல்ல. எமது கட்சியின் முன்னேற்றத்திற்கு அவர் எதிரானவர். அடுத்த வாரமளவில் பகையைக் காண்பிப்பார்கள். 

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்படும் போது, அக்கட்சியிலிருந்தும் ஒரு குழுவினர் பிரிந்து செல்வார்கள். கபீர் ஹாசீமின் பதவி பறிபோகும். அகில மற்றும் சாகல நியமிக்கப்படுவார்கள். 

மைத்திரிபால சிறிசேனவிடம் எவ்வாறு செல்வது என்று ஒரு குழுவினர் காத்திருக்கின்றனர். இவ்வாறான காரணிகளை நாம் பகையாக்கக்கூடாது. 

இதனாலேயே நான் தற்போது சந்திரிக்கா பண்டாரநாயக்கவை திட்டுகின்றேன். அவருக்கு ரணில் சாதகமான ஒருவர். மஹிந்த எதிரி. அது தவறாகும். கட்சியை செயற்படுத்திய எமது தலைவி தற்போது காலாவதியாகியுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன். 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு ஒன்றைக் கூறவேண்டும். மைத்திரிபால சிறிசேன சாதகமானவர். அவரை எதிரியாக்க வேண்டாம்.

1 comment:

  1. He is doing double game. Now he is like a monkey which in the wall

    ReplyDelete

Powered by Blogger.