Header Ads



"மனோ கனேசனின் கருத்தினை கண்டு, மனவேதனை அடைகின்றேன்"

முந்திய செய்தி


அன்புள்ள மனோ ஐயா அவர்களே!

எப்போதும் அணைத்து மதங்களுகலுக்கும் குரல் கொடுப்பதில் நீங்கள் ஒருபோதும் பின் நின்றது இல்லை . விசேடமாக கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதம் தலை தூக்கிய பொது ,நம் முஸ்லிம் தலைவர்கள் கூட குரல் கொடுக்க தயங்கினர். அவ்வேளையில் நீங்கள் எங்களுக்காய் குரல் எழுப்பினீர்.

 இது போன்ற செயற்பாடுகளினால் நம் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தீர். விசேடமாக நம் இளைஞ்சர்களின் உதடுகளில் உங்கள் நாமம் உரைத்தது,அது கடந்த தேர்தலின் போது நம் இளைஞ்சர்களின் முகப்புத்தகத்தின் ஊடாய் எதிர் ஒலித்தது.

மேலும் அஸ்வர் அவர்கள் உங்களுடன் தவறாக நடந்து கொண்டதுக்கு முதன் முதலாய் போர்க்கொடி தூக்கியதும் நம் முஸ்லிம் இளைஞ்சர்கள் தான். முஸ்லிம்களின் பிரதான இணைய ஊடகங்கள் ஊடாக அஸ்வர் அவர்களுக்கு எதிராக பல கட்டுரைகள் வந்ததையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். மேலும் இது தொடர்பாக அடியேன் நானும் உங்களுடன் நேரடியாக தொலை பேசியில் உரையாடியதோடு மட்டும் அல்லாமல் ,எனது கட்டுரை ஒன்றையும் பிரசுரித்திருந்தேன்.

இப்படி எங்களில் ஒருவராக திகழ்ந்த உங்களிடம் இருந்து நாங்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு முகப்புத்தக பதிவினை எதிர்பார்க்கவில்லை.

இஸ்லாம் அழகிய மதம்.எப்போதும் மற்றவரை மதித்தல்,மற்றவர்களின் மதங்களை மதித்தல் போன்ற அழகிய பண்புகளை வலியுறுத்தும் ஒரு மதம். இதனை அண்மையில் நீங்கள் கூட உங்கள் முகப்புத்தக பதிவொன்றின் மூலம் தெரிவித்து இருந்தீர்கள். (அபுதாபியில் முஸ்லிம் மத தலைவர்கள்,கோவில் கட்ட நிதி மற்றும் நிலம் வழங்கினர் என்ற பதிவு)

இப்படிப்பட்ட அழகிய மார்க்கம் யாரையும் தன் மார்கத்துக்கு வருமாறு வறபுருத்தாது. யாரோ உங்கள் நண்பர்  கவலை பட்டதுக்காக இவ்வாறான பதிவொன்றை இடுதல் எவ்விதத்தில் நியாயம்??

மனிதன் தான் விரும்பிய மதத்தினை பின்பற்றுவது அவர்களின் தனி உரிமை. இதற்க்கு எவ்வாறு சட்டம் தடை விதிக்க முடியும்? அவ்வாறு தடை விதித்தால் அது தனி உரிமை மீறல் ஆகும்.

ஆனால் நீங்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் உண்டு. நீங்கள் எப்போதும் சமுகங்களுகிடைலான ஒற்றுமையை விரும்புபவர். உங்களின் இந்த முடிவு இனமுறுகளை தடுப்பதற்கான ஒரு உக்தி என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்.

எனினும் இன முறுக்லை தவிர்க்க இது முடிவாகாது. எந்த மதத்திலும் சில இன வெறியர்கள் இருக்கதான் செய்கிறார்கள். இவ்வாறான இனவெறியர்களால் தான் பிரச்சினை உருவாகிறது. எனவே இதற்கு தீர்வு இனிமேல் இவ்வாறான சமுகம் உருவாகாது பாதுகாத்தல்.

உங்கள் அமைச்சின்  பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையே இன ஐக்கியத்தினை வளர்க்க செயற்திட்டம் ஒன்றினை ஆரம்பித்தல். மேலும் மார்க்க அறிஞ்சர்கள் ஊடாக மக்களை தெளிவு படுத்தல் இது போன்ற விடயங்களை ஏற்படுத்துவதன் முலம் இன ஐக்கியத்தினை உருவாகலாம் என்பது எனது நம்பிக்கை.

மேலும் உங்கள் பதிவில் இஸ்லாம் மதத்தினை தாக்கும் வகையில் அமைந்துள்ள ""கிறிஸ்தவ மதம் என்னும்போது அது மதத்துடன் மாத்திரம் நின்று விடுகிறது. இஸ்லாம் என்று சொல்லும்போது அது ஒரு இனமாக மாறி விடுகிறது.'''' இந்த கருத்தினை கண்டு மிகவும் மன வேதனை அடைகின்றேன்.
நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நான் பல தடவை பிராத்தனை செய்திருக்கிறேன் என்பதினை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

7 comments:

  1. சகோதரரே ! மனோவிற்கு பாடம் நடத்துகின்றீர்களா ? அல்லது செவிடன் காதில் சங்கு ஊதுகிரீர்களா ? அல்லது இவரிடம் அனுதாபம் தேடி மன்னிப்பு கோரலை எதிர்பர்கின்றீர்களா? இவர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததாக சொல்லும் நீங்கள் ஏன் ஆசாத் சாலியை பற்றி சொல்லவில்லை ? இவர் ஒரு நல்லவர் என தோன்றும் மனோ அவர்கள் உள்ளத்தில் உள்ளது கபட நாடகமே. இவர் போன்றோர் அதிகாரம் கூட கூட அட்டகாசம் செய்வோராவர். இஸ்லாம் எனும் பொது அது ஒரு இனம். இவர் போன்ற ஹிந்து ஜந்துக்களிடம் பலகோடி இனம் உ. பிராமணன், ஷாற்றியஸ் ,ஷுட்ற, சந்டலஸ். என்ன பேசுகிறோம் என தெரியாத அரசியல் வாதிகளில் இவருக்கும் இடமுண்டு.

    ReplyDelete
  2. While agreeing with the above view, I like to mention taking measures against organized conversions by providing financial or other inducements is reasonable. One fact, Hon. minister appears ignorant is that many thousands of Muslims in Colombo and around the island had been coverted to other religions!

    ReplyDelete
  3. Mano already said many comments will come agaunst my statment.dears no worry.nothing happend.

    ReplyDelete
  4. சகோ Riskhan Ahamed

    உங்கள் கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன். ஏனென்றால் குறித்த மறுப்புக் கட்டுரை அமைச்சர் மனோ கணேசனைப் பற்றியதே அதில் அவரைப் பற்றி மட்டுமே கூற வேண்டும். ஆசாத் சாலி பற்றி கூறுவதற்கு வேறு சந்தர்ப்பம் வரும் அப்போது கூறலாம்.

    மேலும், இஸ்லாம் அழகிய இங்கிதமான பண்புகளை எமக்கு கற்றுத் தந்துள்ளது. அதனை எவ்விடத்தில் பிரயோகிக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொண்டு செயற்படுபவர்தான் அழகிய முந்தாரியான முஸ்லிமாக முடியும். இல்லாவிட்டால் பிறர் சொல்லும் குற்றச்சாட்டுக்களை நாமாகவே உண்மைப்படுத்தி இஸ்லாத்தையும் இழிவுபடுத்த நாமே காரணமாக அமைவோம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  5. bbs.mano co.production ithu mano madyanuku suyavirpam enra word puriya vilaya

    ReplyDelete
  6. திரு முனவ்வர் அவர்களே !

    ஆசாத் சாலியும் தான் அன்று குரல் கொடுத்தார் என்று சொன்னதன் அர்த்தம் அச்சமயம் எல்லோரும் முஸ்லிம்களின் வாக்குகளுக்காக தான் என்பதை நினைவு படுத்தவே.

    மனோ அவர்களின் கருத்தின் பாரதூரத்தை நாம் விளங்க வேண்டும். இந்த கருத்தின் பின் உள்ள இந்துத்வா வாதம் உங்களுக்கு புரிகிறது என்பதை நம்புகிறேன். இந்தியாவில்ஒரு ஹிந்து மாணவனுக்கு தண்ணீர் கொடுக்காமல் இந்துத்வா மாணவர்கள் தடுத்து அச்சிறுவன் மடிந்ததை நம் ஊர் பத்திரிகையில் கண்டோம்.

    ஹிந்துக்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. தீண்டாமை போக்கிய பாரதியும் , காந்தி அவர்களும், ஏன் சம்பந்தன் அய்யா போன்றோரும் என்றும் போற்றபடவேண்டியவர்களே. ஆனால் துவேஷ சிந்தனை கொண்ட ஹிந்து, பெயரளவிலானமுஸ்லிம் போன்றோர் என்றும் ஜந்துக்கலே.

    கடைசியாக உங்கள் முன்மாதிரியை பின் பற்றகூடியவர்கள் உங்கள் குழந்தைகளே. அதை விடுத்து ஏனையோர் உங்களை முன் மாதிரியாக ஏற்க வேண்டும் என்பதை எதிபார்ப்பது முட்டாள்தனமே.

    ReplyDelete
  7. இப்படி உள்ளுக்குள் விஷத்தை வைத்து கொண்டு வெளியில் நல்லவனை போன்று சமூக நல்லிணக்கம் பேசும் இவர்களை விட வெளிப்படையாக இனவாதம் பேசும் சிங்கள இனவாதிகள் மேல் அவர்கள் இனவாதிகள் என்று எமக்கு தெரியும் இவர்கள் நண்பர்கள் போல் பழகி இறுதியில் கழுத்தறுக்கும் கயவர்கள் என்று இறுதி தருணத்தில் தான் தெரியவரும். முதுகெலும்புள்ள எந்த முஸ்லிம் அரசியல் வியாதியாவது இதுக்கு கண்டனம் தெரிவிப்பாரா என்று பாப்போம்

    ReplyDelete

Powered by Blogger.