Header Ads



முஸ்லிம் விவாக - விவாகரத்துக்கு முஸ்லிம் பெண்கள் முன்வைத்துள்ள யோசனைகள்

-ARA.Fareel-

இலங்­கையில் தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக விவா­கரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக ஓய்வு பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு­விற்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­னணி பல பரிந்­து­ரை­களைச் சமர்ப்­பித்­துள்­ளது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­னணி சமர்ப்­பித்­துள்ள சிபா­ரி­சு­க­ளா­வன.

* மண­ம­களின் சம்­மதம் மற்றும் மண­ம­களின் கையொப்பம் என்­பன திரு­மண சான்­றி­தழில் சேர்க்­கப்­பட வேண்டும்.

* முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 12லிருந்து 16 ஆக உயர்த்­தப்­பட வேண்டும். 

* மனை­வி­யினால் கோரப்­படும் "பஸஹ்"  விவா­க­ரத்­துக்­கான கார­ணங்­களில் பொருத்­த­மின்மை போன்ற கார­ணங்­களும் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்டும்.

* திரு­மண ஒப்­பந்­தத்தில் நிபந்­த­னைகள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். தலாக் இதப்லிஸ் அதா­வது விவா­க­ரத்தின் பின் தமது உரி­மை­களைக் கைய­ளித்தல் போன்ற விட­யங்­களை விவாக ஒப்­பந்­தத்­தி­லேயே இரு சாராரும் ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். இது தென், தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. அத்­தோடு கலா­நிதி சஹாப்தீன் தலை­மை­யி­லான குழு­வி­னாலும் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

* பல­தார மணத்­திற்­கான உரி­மைகள் நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

* கணவன் மூல­மாக ஒரு தலைப்­பட்­ச­மாக வழங்­கப்­படும் விவ­கா­ரத்­திற்கு (தலாக்) விதி­மு­றைகள், மட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட வேண்டும் (கார­ணங்கள் எது­வு­மின்றி விவா­க­ரத்து வழங்­குதல் என்­பன) 

* திரு­மணம் ஒன்று பதிவு செய்­யப்­படும் போது அத்­தி­ரு­மணம் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் முதலாம், இரண்டாம், மூன்றாம் திரு­மணம் என்­பது தொடர்பில் தெளி­வாகக் குறிப்­பி­டு­வ­தற்­காக கட்டம் ஒன்று திரு­மணப் பதி­வேட்டில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும்.

* ஒரு பெண் தனது மஹரை பண­ரீ­தி­யான பெறு­ம­தியில் திருப்பிச் செலுத்­து­வதன் மூலம் எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மற்ற குலா விவா­க­ரத்து பெறும் உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

* தாம் விரும்பும் மத்­ஹபில் இருப்­ப­தற்­கான உரிமை சக­ல­ருக்கும் உண்டு என்­பது கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வேண்டும். (ஷாபி, மாலிகி,ஹம்­பலி,ஹனபி) 

* பரா­ம­ரிப்பு செலவு பெற்றுக் கொள்ளும் உரிமை விவா­க­ரத்தால் பாதிக்­கப்­பட்ட மனைவி பிள்­ளை­க­ளுக்­கான பரா­ம­ரிப்பு வழங்­கு­வதை வினைத்­தி­ற­னாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இடைக்­கால மற்றும் கடந்த கால பரா­ம­ரிப்­பையும் உள்­ள­டக்க வேண்டும்.

* கைக்­கூலி, மீட்பு தொடர்­பான சரி­யான நடை­முறை காணப்­ப­ட­வேண்டும். 

* பஸஹ் மற்றும் தலாக்­கிற்கும் மதாஹ் வழங்­கப்­பட வேண்டும்.

* காதி நீதி­ப­தி­களின் நிய­மனம் அவர்­க­ளது தகைமை, சம்­பளம் என்­பன தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட வேண்டும்.

* பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக, நியா­ய­ச­காய அங்­கத்­த­வர்­க­ளாக, உப­தேச சபை அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப் பட்டுள்ள குழு நீதியமைச்சரிடம் சமர்ப் பிப் பதற்காக தனது இறுதி அறிக்கை யைத் தயாரித்து வருகிறது. இந்த இறுதியறிக்கை யில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை உள்ளடக் குமாறு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

7 comments:

  1. திருமணத்தின் போது கணவன் வேண்டும் (சீ)தனம் எவ்வளவு, பொருளாகவெண்றால் அது என்ன பொருள்? பொருளின் மதிப்பு என்ன என்பவைகள் குறிப்பிடப்பட திருமண சான்றிதழில் கட்டம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதைக்குறிப்பிட்டு,

    விவாகரத்தால் பாதிக்கப்பட்டவருக்குரிய பராமரிப்புத் தொகை என்பது மீட்டெடுக்கும் தலாகாவாக இருந்தால். அதனால் எத் தலாக் எனக் குறிப்பிடப்பட வேண்டும் (முத்தலாக், மீட்டெடுக்கும் தலாக்)

    ReplyDelete
  2. அல்லாஹ் இந்த மார்க்கத்தில் குறை செய்துள்ளான் அதனை பூர்த்தி செய்தல் வேண்டும் என்ற போக்கில் தான் இந்த பெண்களின் சில கருத்துக்கள் அமைந்துள்ளன. ஆதலால் அவைகளை மிக கவனமாக கையாளுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.
    அவைகளில் சில:
    01. பெண்களின் வயதெல்லை மட்டிடுதல்.
    02. பெண்கள் காழிமார்களாக நியமித்தல்
    03. பலதார மணத்திற்கு கட்டுப்பாடுகள்
    04. மதாஹ் எச்சந்தர்ப்பங்களில் வழங்கப்படல் வேண்டும். விவாகரத்திற்கான நிபந்தனைகள் பேன்ற அனைத்தையும் மார்க்க்கம் சொல்ல்லியுள்ளது அதனை பின்பற்றுவோம்.
    அல்லாஹ்வின் சட்டங்களில் கைவைத்தலிருந்த எம்மை அல்லாஹ் பாதுகாத்து அவனது கோபப்பார்வையிலிருந்தும் எம்மை பாதுகாப்பானாக!!!

    ReplyDelete
  3. Dear sisters,

    You have to request to Allah.no one can he change in shariya rule accept allah so fear about Allah and don't try to make some change in shariya.every things are completed in Islam.

    AbdulHathi

    ReplyDelete
  4. Fawas Haroon அவர்கள் சொன்ன விடயங்களோடு இன்னுமொன்றையும் சேர்க்க வேண்டும் // தாம் விரும்பும் எந்த மத்ஹபிலும் இருக்க உரிமை // என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால் Fawas கூறியது போல அல்லாஹ்வும் அவனது தூதரும் எதோ குறை வைத்திருக்கிறார்கள் அதை இந்த மத்கபுகளால்தான் செய்ய முடியும் என்பது போல இருக்கிறது. அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக. கடந்த காலங்களில் அவர்ரிந்த் தேவை இருந்திருக்கலாம் ஆனால் தற்போது யாரும் அவற்றை நாடியிருக்க வேண்டிய அவசியமில்லை நபிகளாரின் எல்லா வழிகாட்டலும் மிகவும் தெளிவாகவே உள்ளதால் அல் குர்ஆன் சுன்னா அடிப்படையில் மாத்திரமே செயற்பட வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும்

    ReplyDelete
  5. இவர்களுக்கு மத்ஹபுஹளை பின்பற்றும் உரிமை வேண்டுமாம்.சஹாபா பெண் மணிகள் எந்த மத்ஹபுகளை பின்பற்றினார்கள் நீங்கள் போற்றிப்புகளும் பாத்திமா (ரலி)அவர்கள் எந்த மத்ஹபுகளை பின் பற்றினார்கள்.

    ReplyDelete
  6. Clear, that womens are always mad

    ReplyDelete

Powered by Blogger.