Header Ads



வீட்டுத் திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவுசெய்யும் படிவம் - பொதுமக்கள் மத்தியில் குழப்பம்

வீட்டுத்திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவுசெய்யும்படிவம் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

 தற்போது 21 இலட்சம் பெறுமதியான 65000 உருக்குவீடுகளை கட்டித்தருவதற்கு வெளிநாட்டு உதவியுடன் அரசாங்கம் முன்வந்துள்ளது, அத்திட்டத்திற்கான பயனாளிகளை தெரிவுசெய்யும் பட்டியலில் காணப்படும் கேள்விகளை நோக்கும்போது கடந்த அரசாங்கத்தின் அணுகுமுறை இந்த அரசிலும் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வீட்டுத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் வீடுகளின் தரம் குறித்து ஒரு பக்கத்தில் சந்தேகங்கள் எழுந்துள்ள அதேவேளை பயனாளிகள் தெரிவுசெய்யப்படும் விதம் மக்களிற்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, அந்த படிவத்தில் தற்போது முகாமில் இருக்கின்றீர்களா என்ற கேள்வி மாத்திரம் காணப்படுகின்றது.

ஆனால் பொதுமக்களிற்கு ஏற்பட்ட இழப்பீடுகள் தொடர்பில் விபரங்களை பெறுவதற்கான எந்த வினாவும் அந்த படிவத்தில் காணப்படவில்லை, மேலும் இந்த கேள்வி காரணமாக முகாமில் இல்லாத அதேவேளை இழப்பை சந்தித்தவர்கள் இந்த உதவிதிட்டத்தில் உள்வாங்கப்படாத நிலையும் ஏற்படலாம், மேலும் மக்கள் இந்த விண்ணப்பங்களை எங்கு பெறுவது, யாரிடம் கையளிப்பது என்பது தெரியாத நிலையிலும் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.