குருநாகல் பள்ளிவாசல், குறித்த ஒரு விளக்கம்
முக்கிய குறிப்பு - எமது செய்தியாளர் இக்பால் அலி அனுப்பிய செய்தியை ஜப்னா முஸ்லிம் இணையம் அப்படியே பிரசுரித்தது. எனினும் தற்போது அந்த செய்தி குறித்து ஒரு விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது. இது இதோ..!
அன்புடையீர் அன்ஸீர்
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்
திருத்தியனுப்பி வைக்கப்பட்ட செய்தியை பதிவு செய்துதவுமாறு அன்புடன் இரண்டாவது விடுத்தமாக அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இக்பால் அலி
பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் 2279 மில்லியன் ரூபா செலவில் ஸ்பெயின் நாட்டின் நிதி உதவின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 11-04-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அங்கு கருத்துத் தெரிவிகையில்
முன்னர் பதிவு செய்யப்பட்ட செய்தி தவறானதாகும். இக் கூட்டத்தில் தான் பின்வருமாறுதான் பேசியிருந்தார். இதனைத் திருத்தி பதிவு செய்யுமாறு வேண்டுகின்றேன்.
பொல்கஹவலையில் மேம்பாலமம் ஆரம்பிப்பதற்காக பிரதேச செயலகம் மற்றும் குருநாகல் எனப் பல இடங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொல்கஹவல புகையிரத மேம் பாலப் பணிக்காக இந்நகரிலுள்ள பள்ளிவாசலின் காணியில் ஒரு பகுதியொன்று அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை முன்வைத்தனர். இது தொடர்பாக அனைத்து பொல்கஹவெல ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளும் இணைந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தினம் பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த மேம்பாலத்தினுடைய அபிவிருத்திப் பணிக்காக பள்ளிவாசலின் ஒரு பகுதிக் காணி வழங்கப்பட்டாலும் பருவாயில்லை. அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. தம் நகரின் அபிவிருத்திப் பணிக்காக வழங்கத் தயாராகவுள்ளோம் என்று பள்ளிவாசல்களின் தலைவர்கள் உட்பட ஊர் மக்கள் ஏகமானதாக தீர்மானம் எடுத்தனர். எனினும் முஸ்லிம்களுடைய மார்க்க பள்ளிவாசலினுடைய காணியில் ஒரு பதிகுதி அகற்றவோ கை வைக்கக் கூடாது. அது அவர்களுடைய புனிதமான இடம் என்று இப்பிராந்தியத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள அரசியல்வாதிகள் அறிக்கைகளை சமர்ப்பித்து இப்பள்ளிவாசலின் காணியின் ஒரு பகுதி உரிய இடத்தல் இருக்கும் வேண்டும் என்ற வகையில் மேம்பாலத்தை நிர்மாணிப்பதற்காக திட்டமிட்டப்பட்டுள்ளார்கள. இதுதான் இன்றைய நல்லாட்சிக்குரிய அடையாளமாகும். இதையிட்டு நான் மிகவும் பெருமிதம் அடைவதோடு அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தெரிவித்தார்.
Post a Comment