சினிமாவில் முஸ்லிம்கள் மீதான கட்டுகதைகளை, சகிக்க முடியாது - விஜய் ஆண்டனி
தமிழ் சினிமா வரலாற்றில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்து வந்த சினிமாத்துறையில் நீர்ப்பறவை படத்தின் மூலமாக நடிகர் சமுத்திரக்கனி முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல, நாம் அனைவரும் ஒன்று என்ற கருத்தை சொல்லியிருப்பார். அந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றதை நீங்கள் அறிவீர்கள்.
அதனைத்தொடர்ந்து...
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தில் அவர் மருத்துவ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ஒரு முஸ்லிம் என்பவன் நேர்மையானவன் என்பதை பிரதிபலித்திருப்பார்.
அந்த படத்தில் சலீம் ஓர் முஸ்லிம் என்பதினால் காவல் அதிகாரி நீ அல் கொய்தாவா, இந்தியன் முஜாஹிதீனா என்று கேட்கும் போது சலீம் என்று பெயர் இருப்பதினால் இவ்வாறு கேட்கிறீர்கள், என்னுடைய பெயர் விஜயாக இருந்தால் என்ன சொல்வீர்கள், ஆண்டனியாக இருந்தால் என்ன சொல்வீர்கள் என்று தமிழ் சினிமா உலகுக்கும், இந்திய ஊடகங்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்திருப்பார்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் தமிழ் ஹிந்து பத்திரிக்கை எடுத்த பேட்டியில் சினிமாவில் இஸ்லாமியர்கள் மீது கட்டுக்கதைகள் திணிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு....
தமிழ் ஹிந்து :
சக மத சகிப்புத்தன்மை அபூர்வமாகி வரும் இந்த வேளையில் இஸ்லாமிய அடையாளம் கொண்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ஆச்சர்யப்படுத்துகிறிர்களே ?
விஜய் ஆண்டனி :
இதை பெருந்தன்மை என்று மட்டும் எண்ணி விடாதிர்கள். இது ஒரு சகோதரனாக என்கடமையாக எண்ணுகிறேன்.
என் நண்பர்களில் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கிறிஸ்தவனாக பார்ப்பதில்லை. அன்பு மட்டுமே சிறந்த மதம் என்பதை இந்த மாநகர வாழ்க்கை கற்றுகொடுத்திருக்கிறது.
எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு நெருக்கடி என்றாலும் அவர்களுக்கும் கை கொடுக்கவேண்டியது நமது கடமை.
இஸ்லாமிய சகோதரர்கள் மேல் திணிக்கப்படும் கட்டுக்கதைகளால் சமீபகாலமாக அவர்களின் மன அழுத்தத்தை நானும் உணர்ந்தேன்.
சினிமாவில் முஸ்லிம்கள் மீதான கட்டுகதைகள் அதிகமானதை கண்டு சகிக்க முடியாதவர்களில் நானும் ஒருவன். இதை எல்லாம் நான் பெருமைக்காவும் பெயருக்காவும் செய்யவில்லை. என் கடமைக்காகவே செய்கிறேன்.
இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Welldone vijay Antony,may almighty guide u to right path
ReplyDeleteHe is a good person.there is one more joseph vijay..he is funded by Christian missionaries. .and all his films insulting islam and muslims.eg...thuppakki. ..sadly most of srilankan Muslims watching his films and commenting favour for him in social medias...he is the big enemy in tamil cinema against muslims.
ReplyDeletefilm karam so u dot watch film other wise we know about u mr.
Delete