Header Ads



புதிய அர­சியல், கட்­சி ஆரம்­பிக்­கலாமா..?


-ARA.Fareel-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும், செய­லாளரும் இணைந்து புதிய அர­சியல் கட்­சி­யொன்­றினை ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக பர­வி­யுள்ள வதந்­தியில் எவ்­வித உண்­மை­யு­மில்லை.

நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை விட்­டுப்­பி­ரிந்து செல்லப் போவ­தில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் தெரி­வித்தார்.

கட்­சிக்குள் சவா­லுக்­குள்­ளா­கி­யுள்ள ஜன­நா­ய­கத்தை மேம்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இது உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இதற்­காக போராட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எம்.ரி. ஹசன் அலியும் பசீர் சேகு­தா­வூதும் இணைந்து புதிய அர­சியல் கட்­சி­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சித்து வரு­கின்­றனர் என்று செய்­திகள் வெளி­வந்­துள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

செய­லாளர் ஹசன் அலி தொடர்­பா­கவும் என்னைப் பற்­றியும் பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்கும் இரண்டு அர­சியல் உச்­ச­பீட உறுப்­பி­னர்கள் தொடர்­பா­கவும் பலர் பல்­வேறு கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.

கட்­சிக்குள் சமத்­துவம் இருக்க வேண்டும். அங்கு ஜன­நா­யக விழு­மி­யங்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். மதிக்­கப்­பட வேண்டும். இந்தக் குறை­களை நாம் நிவர்த்தி செய்ய வேண்­டி­யுள்­ளது. இது எமது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கட­மை­யாகும்

கட்சி தவ­று­த­லாக உயர்­பீட உறுப்­பி­னர்­களான இரண்டு மௌல­வி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்துள்ளது. ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். அடுத்தவர் இடை நிறுத்தப்பட்டுள்ளார். எனவே கட்சிக்குள் ஜனநாயகம் சவாலாகியுள்ளமை தெளிவாகிறது என்றார்.

1 comment:

  1. நெருப்பில்லாமல் புகை வராது. வீட்க்கொரு கட்சி; இல்லை இல்லை. வீட்டுக்கு நான்கைந்து கட்சி என்பதும் இலங்கை முஸ்லிம் அரசியலில் சாத்தியமே.

    ReplyDelete

Powered by Blogger.