Header Ads



"முஸ்லிம்கள் விடும் தவறுகள், இஸ்லாத்தின் தவறுகளாக காட்சிப்படுத்தப்படுகின்றன"


முன்மாதிரிஎம் முன்னால் திறந்திருக்கும் தஃவாவின் பிரதான வாயில்

அபூ முஆத் (ஸலபி) -மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகம்-

ஒரு முறை இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய சன்மார்க்க அறிஞர் இமாம் அபுல்ஹசன் அலி நத்வி (ரஹ்) அவர்களிடம் இலங்கை தேசத்தில் இஸ்லாமிய பிரசார முன்னெடுப்புக்கள் குறித்த கேள்வி ஒன்று தொடுக்கப்பட்டது அதற்கு "இங்கு பண்பாடுகள் என்ற வாயிலைத் தவிர மற்ற அனைத்து பிரசார வாயில்களும் மூடப்பட்டிருப்பதாக" அவர் பதிலளித்திருந்தார்.

இன்றைய இலங்கை சூழலோடு மேற்போந்த கருத்தானது எந்தளவு தூரம் பொருந்துகிறது என்பது எமது ஆழ்ந்த கவனத்திற்குறியது. இலங்கை முஸலிம்களாகிய நாம் இந்த நாட்டில் சிறபான்மையாக வாழ்கிறோம். இப்படி வாழும் போது எம்முன்னாலுள்ள முதன்மைப் பிரச்சினையானது எமது சுய ஆளுமையை இழக்காமல் வாழ்வதாகும். அப்படி வாழும் போது நாம் மூடுண்ட ஒரு சமூகமாக இருக்காமல் அடுத்த சமூகங்களுடன் உறவுகளைப் பேணுபவர்களாக இருக்கவேண்டும். அவ்வாறு உறவுகளைப் பேணி வாழும் போது  எமது தனித்துவம் இழந்து மாற்று மதத்தவர்களின் சமய கலாசார பாரம்பரியங்களில் கரைந்து போகாமலிருப்பது முஸ்லிம்களாகிய எம்மைப் பொருத்தவரை இன்றியமையாததாகும். 

இன்று முஸலிம்களாகிய நாம் இலங்கை நாட்டில் பிற மதத்தவர்களோடு பல உறவுகளைப் பேணி வாழ்ந்து வருகிறோம். எம்மோடு அண்டைவீட்டாளர்காளாக, வேலைத்தளங்களில் பணி புரிபவர்களாக, கல்விக்கூடங்களில் கற்பவர்களாக, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக என முஸ்லிம்-முஸ்லிமல்லாதவர்களின் உறவு பரந்து பட்டது எனலாம்.

இவ்வாறானதொரு உறவுப் பாரம்பரியத்தைக் கொண்ட நாம் அவர்களுக்கு நாம் ஏற்றிருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளை எவ்வளவு தூரம் பிரசாரம் செய்துள்ளோம் ஆகக்குறைந்தது எம்மைப் பற்றி எமது மார்க்கத்தைப் பற்றி அந்நிய சமூகங்கள் மத்தியில் எழுப்பபட்டிருக்கும் பிழையான புரிதல்களை களைவதற்காக முயற்சித்திருக்கிறோம் போன்ற வினாக்கள் இன்றைய சூழலில் எழுப்பப்படவேண்டியவை. விடை காணப்படவேண்டியவை

நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய பிரசார பணியில் அண்ணலாருக்கு முஸ்லிம்களில் மிக்க பக்க பலமாக இருந்த இரு பெரும் ஆளுமைகள்தான் அவரது நண்பர் அபூபக்ர் (ரழி) அவர்களும் தனது மனைவியார் அன்னை கதீஜா (ரழி) அவர்களும் ஆவர். இஸ்லாத்தை தழுவிய இவர்கள் இருவரும் தத்தமது பொருளாதார, சமூக செல்வாக்கினூடாக இஸ்லாமிய பிரசார பணிக்கு உதவிக்கரம் புரிந்தவர்கள். அதே நேரம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாது அண்ணலாருக்கு உதவிக்கரம் நீட்டிய ஒரு மனிதர்தான் அண்ணாரது சிறிய தந்தை அபூ தாலிப் ஆவார். இவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை இருந்தபோதிலும் தனது சமூக செல்வாக்கை பிரயோகித்து நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய பிரசார பணிக்கு பங்காற்றியவர். குறிப்பாக அண்ணலார் குரைஷிக் காபிர்களின் புறத்திலிருந்து சந்தித்த சொல்லொன்னா துன்பங்களையும் துயரங்களையும் விட்டு பாதுகாத்தவர் என்பது இங்கு நோக்கத்தக்கது.

இலங்கை நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்களாகிய நாம் எங்களுக்கெதிரான பெரும்பான்மை சமூகத்திலிருந்து செயற்படும் ஒரு சில இனவாதக் குழுக்களின் கொட்டத்தை அடக்குவதற்கு இந்த நாட்டில் பொதுவாக அபூபக்கர்களையும் கதீஜாக்களையும் உருவாக்குவதற்கு முன் நாம் எமக்காக பேசக்கூடிய அபூதாலிப்களை உருவாக்கவேண்டிய தேவையுடையவர்களாக உள்ளோம். ஆனால் துரதிஷ்டவசமாக எமது மோசமான நடத்தைகள் காரணமாக இன்று எங்களுக்கெதிராக செயற்படக்கூடிய அபூஜஹ்ல்களையே உருவாக்கியுள்ளோம் என்பது கசப்பான உண்மையாகும்.

பொதுவாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் மாற்றுமத சகோதரர்கள் முஸ்லிம்களை நோக்கி முன்வைக்கும் பிரதான ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது முற்றிலும் உண்மையில்லை என்றிருந்தாலும் பிரச்சினையின் கனதியை விளங்கப்படுத்த அக்கருத்து இங்கு எடுத்தாளப்படுகிறது. "நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் முஸ்லிம்களை பார்த்திருந்தால் நிச்சயம் இம்மார்க்கத்தை தழுவியிருக்கமாட்டோம்" என்பதே குறித்த குற்றச்சாட்டாகும்

இந்நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் மாற்று மதத்தவர்களுக்கு நல்ல முன்மாதிரியை விட ஒரு பிழையான முன்மாதிரியையே எமது பொது வாழ்வினூடாக காட்டியுள்ளோம். காட்டியும் வருகிறோம். இன்று இலங்கையில் போதைப் பொருள் விநியோகம் செய்பவர்களாக சர்வதேச மாபியா கும்பல்களோடு தொடர்புடையவர்களாக பாரிய நிதி ஊழல் குற்றச்சாட்டோடு தொடர்புடையவர்களாக முஸ்லிம்கள் காணப்படுவது கவலைக்குறியதாகும். 

முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் பொது வாழ்வில் ஏனைய மனிதர்களோடு நாகரிகமான முறையில் உறவுகளை கடைபிடிக்க தெரியாதவர்கள் என்ற தவறான மனப்பதிவுகள் மாற்று மதத்தவர்கள் மத்தியில் வேரூண்றியிருப்பது வெட்க கேடாகும். இதற்கு எமது பிறழ்வான நடத்தைக்கோலங்களே காரணமாகும். ஒரு பொது இடத்துக்கு செல்லும் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்; பேச வேண்டும்; எமது கருமங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற முறை தெரியாதவர்களாக நாம் இருப்பது என்பது கசப்பாக இருந்தாலும் நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழும் ஒரு முஸலிம் விடும் தவறானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையும் அது பாதிப்பதாக அமைந்துவிடுகிறது. இவ்வாறு மாற்று மத சமூகங்களில் நாம் காண முடியாது. இதற்கு ஒரு காரணமும் உண்டு. முஸலிம்களைப் பொருத்தமட்டில் வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் இஸ்லாத்தின் போதனைகளை கடைபிடிப்பவர்கள் உண்ணும் உணவிலிருந்து ஒரு நாட்டை ஆட்சி செய்யும் வரை இஸ்லாம் அனைத்துக்குமான துல்லியமான வழிகாட்டல்களை வகுத்து தந்துள்ளது. இதனால் முஸ்லிம்கள் தெரிந்தோ தெரியாமலோ விடும் தவறுகள் இஸ்லாத்தின் தவறுகளாக காட்சிப்படுத்தப்படுகின்றன. எனவேதான் இதற்கான மாற்று வழிகளை நாம் தேட வேண்டியுள்ளது. உரிய முறையில் இவ்வாறான விடயங்களை நாம் அணுகவேண்டியுள்ளது. இதுவே இன்றைய இலங்கை சூழலில் நாம் செய்ய வேண்டிய முதன்மைப் பணியாக எம்முன் எழுந்துள்ளது.

2 comments:

  1. If Muslim means Islam and Islam means Muslims , then
    Muslims and Islam are responsible for each other's
    actions. A popular writer in the US had written to
    trust Islam and not to trust Muslims because Muslims
    do not follow Islam . Muslims , especially chest
    beating Islam campaigners must start looking at
    their exaggerated claims that the whole world is
    embracing Islam , while the fact is opposite !
    The whole world has been activated to question
    the credibility of religions and more about
    Islam and its followers. If we are proud of being
    called Muslims , then we must behave real Muslim.

    ReplyDelete
  2. Maatru waligal thedawendaam ! Kuraan sunna moolam vetri adaya wali kaattungal !
    DEEN wali namadu vettri wali !

    ReplyDelete

Powered by Blogger.