"இந்த அரசு, திருடர்களுக்கு உதவுகிறது"
ஊழல் செய்தவர்கள் நிம்மதியாக வாழ மைத்திரி, ரணில் உதவி செய்கிறார்கள் கடந்த காலத்தில் எங்களுடைய அமைப்பு சார்பாக 48 ஊழல் முறைப்பாடுகளை நாம் பதிவு செய்துள்ளோம் அதற்கு யாரும் உரிய தீர்வு காணவில்லை என ஊழலுக்கு எதிரான குரல் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று -19- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தின் போது அவர் உட்பட அவரின் குடும்பத்தினரும், பல அமைச்சர்களும் செய்த ஊழல்களை நாங்கள் சாட்சிகளுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு தெரிவித்தோம். ஆனால் அது தொடர்பாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தினார்.
இந்த அரசு தங்களுடைய நிலையை பலப்படுத்துவதற்காக ஊழல் செய்தவர்களுக்கு அமைச்சு பதவி வழங்குகின்றது. இதனால் ஊழல் செய்தவர்கள் நிம்மதியாக வாழ இந்த நாட்டை ஆள்பவர்கள் உதவி செய்கிறார்கள் என தெரிவித்தார்.
அத்துடன், ராஜபக்ஸ தன்னுடைய சகோதரர்களுக்கு வழங்கிய சலுகைகள் போல் மைத்திரியும் தனது சகோதரர்களுக்கு சலுகைகள் வழங்குகிறார் இது என்ன நியாயம்? தாம் இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் மிக விரைவில் இதற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி மக்களின் ஊடாகவே உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறினார்.
அண்மையில் வெளி வந்த பனாமா பத்திரிகையில் இலங்கை அமைச்சர்களின் ஆலோசகர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில அமைச்சர்களின் உறவினர்களின் பெயர்களும் வெளிவந்துள்ளதாகவும் மிக விரைவில் அவர்களின் பெயர்களை வெளியிடுவோம் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சி போன்றே இந்த ஆட்சியிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றது. ஊழல் மோசடிகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பில் இது வரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என கூறினார்.
இதுவும் அரசின் சதியே, ஆட்சிக்கு வரும் போது கூறியதை மறந்து விட்டு திருடர்களுக்கு உதவுகிறது என ஊழலுக்கு எதிரான குரல் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

This so-called "good governance" is a nest of viper.
ReplyDelete