அல்லாஹ்வின் இல்லத்தை தகர்க்க ராவணா பலய முயற்சி, விரட்டியடித்த சிங்கள மக்கள் (படங்கள்)
பலாங்கொடை, கூரகல பள்ளிவாசலை இடித்துத் தகர்க்கும் நோக்கில் சென்ற ராவணா பலய அமைப்பினர் பிரதேசவாசிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள கூரகல கிராமத்தில் ஆயிரம் வருடங்கள் பழைமையான முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுள்ளது. இதற்கு அண்மித்ததாக புத்த விகாரை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் குறித்த பள்ளிவாசல் அதன் அருகில் இருக்கும் விகாரை நிலத்தை ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்டதாக கூறி அதனை இடித்து தகர்க்குமாறு பொதுபல சேனா முதல் ராவணா பலய அமைப்பு வரை கடந்த ஆட்சி தொடக்கம் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் கூரகல பள்ளிவாசலை இடித்துத் தகர்க்கும் நோக்கில் ராவணா பலய திட்டமிட்டு வருவதாக கடந்த சில நாட்களாக ஒரு பதற்றம் நிலவி வந்தது.
இதற்கிடையே இன்றைய தினம் -05- கூரகல பள்ளிவாசலை உடைக்கும் நோக்குடன் வருகை தந்த ராவணா பலய அமைப்பிரை அப்பிரதேசத்தின் சிங்கள மக்களே விரட்டியடித்துள்ளனர்.
மேலும் ராவணா பலய அமைப்பின் இனவாத செயல்களைக் கண்டித்து பிரதேசவாசிகள் பதாதைகளை வைத்திருந்ததோடு பொலிசாரும் பிரதேசவாசிகளுடன் ஒத்துழைத்து இனவாத ராவணா பலய அமைப்பினரை விரட்டியடிப்பதற்கு உதவியுள்ளனர்.
இதன்போது ராவணா பலய மற்றும் சிங்ஹல ராவய அமைப்பினரpன் வாகனங்கள் வந்த பாதையில் பிரதேச மக்கள் டயர்களை வைத்து தடங்கலை உருவாக்கி இடைவழியிலேயே அவர்களைத் திருப்பியனுப்பியுள்ளனர்.
இதன்போது ராவணா பலய மற்றும் சிங்ஹல ராவய அமைப்பினரின் வாகனங்கள் வந்த பாதையில் பிரதேச மக்கள் டயர்களை வைத்து தடங்கலை ஏற்படுத்தி இடைவழியிலேயே அவர்களைத் திருப்பியனுப்பியுள்ளனர்.
பிரதேச மக்கள் இங்கே இனப் பிரிவினையை உண்டாக்க வேண்டாம் என ராவணா பலய துறவிளிடம் வலியுறுத்தியிருந்ததுடன், 'நாம் இலங்கையர்கள்', இனவாதத்தை சிங்கள முஸ்லிம் பிரிவினையை உருவாக்கும் சக்திகளுக்கு எமது அனுதாபங்கள் என பதாதையொன்றும் ஏந்தி நின்று இனவாத ராவணா பலய அமைப்பினரை திருப்பி அனுப்பியிருந்தனர்.
is this news true or just copy paste news from last year same date.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ். இவ்வாறு ஒற்றுமையாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteYa Allah make kindness to the people who protect your house.
ReplyDeleteMaa Sha Allah
ReplyDeleteMaa Sha Allah
ReplyDeleteMasha Allah We are Sri Lankans
ReplyDeletei think it was in 2015
ReplyDeleteAllahu akbar
ReplyDeleteஒற்றுமை எனும் கையிற்றை பற்றிப்பிடித்தால் ஜாதி பேதத்தை அடியோடு அழிக்கலாம்
ReplyDelete