"ஷரீ சட்டங்களை பின்பற்றும் முஸ்லிம்கள், இஸ்லாமிய நாடுகளுக்கு சென்றுவிடுங்கள்"
'ஷரீஅத்' சட்டத்தில் கை வைக்க வேண்டாம் என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கோரிக்கைக்கு எதிராக விஷத்தை கக்கியுள்ளார், 'ஆதித்யநாத்' எம்பி.
லக்னோ'வில் நேற்று -16- முன்தினம் 'அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்' நடத்திய ஆலோசனை கூட்டத்துக்குப்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள்:
முஸ்லிம்களின் 'ஷரீஅத்' சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடாதவாறு அரசு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கடந்த காலங்களில் அமைந்த மத்திய அரசுகள், எத்தகைய வழிமுறைகளை பின்பன்றி முஸ்லிம் 'ஷரீஅத்' சட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளதோ, அதேபோன்ற நடவடிக்கைகளை இந்த அரசும் நடைமுறைப் படுத்தி,
முஸ்லிம் மக்கள் 'ஷரீஅத்' சட்டங்களை பின்பற்றுவதில் தடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டது.
இதையடுத்து, முஸ்லிம் துவேஷ சிந்தனை கொண்ட 'யோகி ஆதித்யநாத்'
ஷரீஅத் சட்டங்களை பின்பற்றி வாழ நினைக்கும் முஸ்லிம்கள், முஸ்லிம் நாடுகளுக்கு சென்றுவிடுங்கள்; இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான ஹிந்துத்துவ சட்டங்கள் தான் அமல்படுத்தப்படும், என்று தனது விஷத்தை கக்கியுள்ளார்.
matta matattai matikkathavan manetene illai
ReplyDelete