நல்லாட்சியில் அக்கிரமம் - ஜனாதிபதி செயலகம் முன், சத்தியாக்கிரகம் செய்த தாய் கைது
தனது மகனின் கல்விக்காக போராடிய தாயையும் அவரது மகனையும் கோட்டை பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாயையும் மகனையும் கோட்டை பொலிஸார் இன்று காலை 11 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் கைது செய்துள்ளனர்.
தாயையும் மகனையும் கைது செய்த பொலிஸார், இவர்களை புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் நிபந்தனையின் அடிப்படையிலேயே பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதாவது இனிமேல் எந்தக் காரணத்திற்கொண்டும் சத்தியாக்கிரகமோ, போராட்டமோ நடத்தக்கூடாது என அனோமா என்ற தாயாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (04) தனது மகனின் கல்வி நிலை தொடர்ந்தும் கேள்விக்குறியாக உள்ளது என கூறி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிர போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment