சிங்கள சகோதரரின் துஆ - பிழையான முன்மாதிரியும், முரண்பாடும்
-சுவைவர் மீரான்-
பஸ்ஸில் தனது மொபைல் போனை கள்வனிடம் பறிகொடுத்த சிங்களவர் ஒருவருக்கு ஹாஜியார் ஒருவர் ஒரு துஆவை கற்றுக்கொடுக்க, அந்த மொபைல் போன் அவரது வீட்டையே சென்றடைந்ததாக சொல்லப்படும் ஒரு சம்பவம் பிரசுரமாகி, பலத்தை விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
அதனைத் தொடர்ந்து கட்டுரையாசிரியர் தன் சார்பு விளக்கத்தை வழங்கி, அதுவும் பிரசுரமாகி உள்ளது.
இந்த சம்பவம் உண்மையில் இஸ்லாமிய வழிகாட்டல்கள், போதனைகளுக்கு முரணாக இருப்பதால், இது ஒரு பிழையான முன்மாதிரியாக முஸ்லிம்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விடக்கூடாது என்பதால் அது குறித்த சிறு விளக்கத்தை மட்டும் வழங்க விரும்புகின்றேன்.
1. உள்ளே நின்றுகொண்டு இருந்த பயணி ஒருவரின் பொக்கட்டுக்குள் கையை விடுவதை கண்டு ஹாஜியார் சைகையால் எச்சரித்தார், பின்னர் அவன் திடீர் என்று இறங்கி ஓடும் பொழுது அமைதியாக இருந்தார்.
இது தவறான ஒரு முன்மாதிரி ஆகும், ஒருவன் நீரில் மூழ்கும்வரை கரையில் சும்மா நின்றுவிட்டு, மையத்தை வைத்துக்கொண்டு துஆ ஓதுவதற்கு இஸ்லாம் கற்றுத்தரவில்லை. ஹாஜியார் என்றால், நிச்சயமாக ஒரு ஆண், ஆகவே திருடன் பொக்கட்டுக்குள் கையை விட்ட பொழுதே அவர் சத்தமாக கத்தி இருக்க வேண்டும். அவன் திடிரென இறங்கி ஓடும் பொழுதாவது பயணிகளை எச்சரித்து இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் ஒருபொழுதும் இப்படி இருக்கக் கூடாது.
உடனேயே தடுக்க சந்தர்ப்பம் இருந்தும், தவற விட்டுவிட்டு, பஸ் போனபிறகு கைகாட்ட (துஆ ஓத) நபி (ஸல்) அவர்கள் ஒரு பொழுதும் கற்றுத்தரவில்லை. முஸ்லிம் விவேகமானவனாகவும், எச்சரிக்கை உணர்வுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
2. ஹதீஸ் - பிழையான புரிதல்
முஸ்லிம் கிரந்தத்தில் ஸஹிஹ் தரத்திலும், இன்னும் பல கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள குறித்த ஹதீஸ், அபூ சலமா (ரலி) அவர்கள் மரணித்த சந்தர்ப்பத்தில், நபி (ஸல்) அவர்கள் அபூ சலமாவின் மனைவி உம்மு சலமா (ரலி) குறித்து ஓதியதாகும். அந்த ஹதீசிலேயே தெளிவாக ஒரு சொல் பயன்படுத்தப் பட்டு உள்ளது, مَا مِنْ مُسْلِمٍ என்பதே அதுவாகும். "யாராவது ஒரு முஸ்லிம்" என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாக குறிப்பிடுகின்றார்கள். முஸ்லிமல்லாத, அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாத ஒருவரின் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்று இஸ்லாம் எத்தகைய உறுதியையும் வழங்கவில்லை, அது மட்டுமின்றி முஸ்லிமல்லாத ஒருவருக்காக பாவமன்னிப்பு / பிரார்த்தனை புரிவதை இறைவன் தடை செய்து இருக்கின்றான்.
3. துஆ - பிழையான அர்த்தப்படுத்தல்
انا لله وانا اليه راجعون؛ اللهم اجرني في مصيبتي واخلفلي خيرا منها என்கின்ற இந்த துஆ கூட, காணாமல் போன, இழந்த பொருளை மீண்டும் தரும்படி கேட்கவில்லை. மாறாக என்றுதான் خلفلي خيرا منها அமைந்துள்ளது, அதாவது, இழந்ததை (பொருள் / நபர் / அறிவு / சந்தர்ப்பம் ) விட சிறந்ததை தரும்படி கேட்பதாகவே அமைந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே, அபூ சலமா (ரலி) அவர்களின் விதவை மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் உலகத்திலேயே சிறந்த மனிதரான முகம்மது நபி (ஸல்) அவர்களை கணவனாக வழங்கினான்.
இந்த வகையிலும் குறித்த சம்பவம், இந்த துஆவுடன் பொருந்திப் போகவில்லை.
4. தரவுகளின் உறுதியற்ற தன்மை
பள்ளி மிம்பருக்குப் பக்கத்தில் நின்று ஹாஜியார் சொன்னார் என்பதாகவே மூல ஆக்கம் குறிப்பிடுகின்றது. இரண்டாவது ஆக்கத்தில், விமர்சனங்களுக்குப் பதிலாக, தான் கேட்டதை நிரூபிக்க ( மிம்பர் ) இடத்தை ஆதாரமாக குறிப்பிட்டதாக கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.
இது உண்மையிலேயே மிகவும் பலவீனமான வாதம் ஆகும். நாடு முழுவதும் பள்ளிவாசல்களும், மிம்பர்களும் உள்ள நிலையில், குறித்த ஆக்கங்கள் எவ்வித ஆதாரத்தையும் வழங்கவில்லை. குறைந்த பட்சம், எந்த ஊர், எந்தப் பள்ளிவாசல், யார் அந்த ஹாஜியார் போன்ற எந்த விபரங்களையும் வழங்காமல், எதனையும் கேள்வியும் கேட்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது, மலையேறிப் போன காலத்தின் பழமையான ஒருவித மனநிலையே.
5. இறுதியாக, நிகழ்வுக்கான சாத்தியங்கள்.
மேற்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா என்றால், அதற்கான சாத்தியங்கள் அறவே இல்லை என்று முற்றாக மறுப்பதற்கில்லை. ஏனெனில் , "காணாமல் போன வைரக்கல் திருமண மோதிரம், 14 வருடங்களின் பின்னர் மீனின் வயிற்றில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டது" என்றெல்லாம் செய்திகளை, புகைப்படங்களுடன் வாசித்து இருக்கின்றோம். ஆகவே, இதனை அந்த வகையில் வேண்டுமானால் அனுகிவிட்டுப் போகலாமே தவிர, அதல்லாமல் இந்த விடயத்திற்கு துஆவையும், ஹதீசையும் பொருத்துவது பிழையான முன்மாதிரி ஆகும். ஏனெனில் ஹாஜியார் முதலில் விட்ட தவறில் இருந்து, ஹதீஸின் பொருத்தமற்ற தன்மை, துஆவின் பொருத்தமற்ற தன்மை என்று நிறையவே உள்ளன.

Stop all this nonsense!
ReplyDeleteMaasha Allah Allah Ungalazu Teliwukku Arul Puriwanaha
ReplyDeletegood article..
ReplyDeleteமிக நாகரிகமான வார்த்தைகளைக் கொண்டு எழுதியதற்காக பாராட்டுகிறேன்.
ReplyDelete1. தொப்பியும் தாடியும் வைத்த ஒருவர் பிக்பொக்கட் கையை விடும் போது கத்த அவன் உசாராகி கையை எடுத்து தம்----யா என்று ஏசத் தொடங்கினால்....சில நேரம் ஹாஜியாரின் போட்டோ இதே இணையத் தளத்தில் வந்திருக்கும். அல்லது அவன் இறங்கிப் போகும் போது களவெடுத்தானா இல்லையா என்று தெரியாத நிலையில் சத்தம் போட்டு இருந்தாலும் இதுதான் நிலைமை. நாட்டில் நடந்த கடந்த கால கலவரங்கள் காடையர்களாலேயெ ஆரம்பிக்கப் பட்டன என்பது தங்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன். முஸ்லிம் விவேகமானவனாகவும், எச்சரிக்கை உணர்வுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
2.முஸ்லிம் கேட்டால் கிடைக்கும் என்பதன் பொருள் காபிர் கேட்டால் மறுக்கப்படும் என்பதா? அல்லது காபிர்களுக்கு பிரார்த்தனைக்கு உத்தரவாதம் இல்லை என்பதா? என்பதை சற்றுத் தெளிவு படுத்துங்கள்.
3.உங்கள் S5 போண் தொலைந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இந்த துஆவை ஓதுகின்றீர்கள். அல்லாஹ் அங்கீகரித்து போண் திரும்பக் கிடைத்தால் சிறந்தது கிடைக்க துஆ செய்தேன். S6 போண் கிடைக்க வேண்டும் என்று கூறுவீர்களா?அந்த சிங்களவருக்கு போணும் அதனுடன் சேர்த்து இஸ்லாத்தை பற்றிய நல்லெண்ணமும் கிடைத்திருக்க முடியாதா? அந்த நல்லெண்ணம் சிறந்தது இல்லையா?
4.மல்வானயிலுள்ள ரக்ஸபான பள்ளியில் வைத்துக் கூறினார். யார் என அறியாமலேயே அந்த சிங்கள சகோதரரின் மனைவிக்கு கள்ளத் தொடர்பு வரைக்கும் கதைகட்டும் சமூகத்தில் ஒரு நல்ல மனிதரின் பெயரைச் சொல்லி அவரை நாறடிக்க நான் விரும்பவில்லை.
5.நிகழ்வுக்கான சாத்தியத்தை நீங்கள் மறுக்காததற்கு நன்றிகள்.
what do you want to express by this article. I can agree with some of your ideas here but I want to ask one question that you say that "Allah"(God)not accept the prayer of none Muslim. If it were so,that none Muslims are living without the help and blessings of god and the Muslims only deserve to have the help and blessing of God? compare the Muslims and the none Muslims,Muslims are far behind them in every field in education,economy,living condition and everything,all these are having without the help and blessings of the God?
ReplyDeleteKeeping in mind that God is not racist.God hates those who hates his creatures they be Muslims or none Muslims or what ever it is.Islam emphasized universal unity. Diversity is Shirk unity is eeman.
do not preach us Taliban and RSS policy.
Idha deyyo saakkindu vituttu ungada welahala paarungo
ReplyDeleteWeenukku maaradikkum mohamed nizous satru sinthikkwum
ReplyDeleteNizous, தெளிவாக சொன்ன பினரும், நீங்கள் தேவையில்லாமல், வீண் பிடிவாதம் பிடித்து, அலட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
ReplyDeleteபிட்பொக்கட் காரனை பிடிக்கின்ற இடத்தில் யாரும் "தம்பியா" என்று இனவாதம் பேசுவதில்லை, நாங்களும் இலங்கையில் தான் வாழ்கின்றோம், பல ஊர்களுக்கும் சென்று வருகின்றோம். சிங்களவர்கள் அந்த அளவு கேவலமான இனவாதிகள் கிடையாது.
யாரும் மனைவிக்கு கள்ளத் தொடர்பு கதை கட்டவில்லை, நீங்கள் அர்த்தமில்லாமல், அமுக்கு, மூடி, எதையோ சொல்லி, மீண்டும் எதையோ சொல்லி, ஏன் இந்த பிடிவாதம்?
Nizous, நீங்கள் முன்வைத்த ஹதீஸ், நீங்கள் குறிப்பிட்ட துஆ ஆகிய இரண்டுமே இந்த சம்பவத்திற்கு சற்றும் பொருத்தமில்லை, பிழை என்பதை கட்டுரையாசிரியர் விளக்கிவிட்டார், பிடிவாதம் வேண்டாம், ப்ளீஸ்.
ReplyDeleteMohamed Noziuos, நீங்கள் வீண் பிடிவாதம் பிடிக்கின்றீர்கள் என்பது புரிகின்றது.
ReplyDeleteநீங்கள் சொல்லும் சம்பவம் எதனால் முக்கியத்துவம் வாய்ந்தது?
அது துஆவின் மூலம் நடந்ததா? அல்லது சாதரணமாக நடந்த ஒரு அதிசய சம்பவமா? முதலில் இதனை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
14 வருடங்களின் பிறகு திருமண மோதிரம் மீனின் வயிற்றில் கிடைத்தது போன்று சாதாரணமாக நடந்த அதியச சம்பவம் என்றால், அதில் துஆவை பற்றி குறிப்பிடத் வேண்டிய தேவையே இல்லை. இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு துஆ தேவையில்லை.
அப்படி அல்ல, இந்த சம்பவம் துஆ கேட்டதன் காரணமாகத்தான் நடந்தது என்றால், அந்த துஆவும், அந்த துஆவை கற்றுத்தரும் ஹதீசும், நீங்கள் சொல்லும் சம்பவத்திற்கு எதிராகவே உள்ளன. அதன கட்டுரையாசிரியர் அழகாக விளக்கி இருக்கின்றார்.
ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும், உங்கள் கட்டுரையில் லாஜிக் இல்லை. உங்களுக்கு அந்த ஹாஜியார் தெரிந்தவர் என்றால், அவர் சொன்னதை நீங்கள் நம்பலாமே தவிர, பொது ஊடகங்களில் எழுதுவது தவறு.
சுபைர் மீரான், நல்ல விளக்கம், ஜசாகல்லாஹ்.
அரைகுறையாக விளங்கிக் கொண்ட இஸ்லாமிய விழுமியங்களை பூரணமானது என எண்ணிக்கொண்டிருக்கும் அன்பர்கள்; அவசியம் 1000/=ரூபா செலவழித்து, 1960 களில் நபிகளாரின் வாழ்க்கை வரலாறு திரிபுருதலை தடுக்கும் முகமாக ராபிதா அமைப்பு சர்வதேச ரீதியில் நடத்திய போட்டியில் இஸ்லாமிய அறிஞர்களால் சரிநிகர் வரலாறு என உறுதிப்படுத்தப்பட்டு முதல் பரிசு பெற்ற நூலான'அர்ரஹீக்' அல்லது 'அர்ரஹீக்குல் மக்தூம்' எனும் நபிகளாரின் வாழ்க்கை வறலாற்று நூலினைப் படியுங்கள். இது விடயத்திலான உங்கள் ஐயங்களுக்கு அதில் தெளிவு இருக்கிறது.
ReplyDeleteI accept this incident but be very logical while u r posting a news since nowadays people are very intelligent so they need everything should perfect and scientific methods to prove it otherwise they ignore it since we obligations these days to Allah is perfect since we take all pure saheeh hadees in real practices and more than all we never missed our subah prayers and isha so that to prove we are real slaves of Allah.So don't publish any hadees which is not saheeh which will creat very big comments among all since we are already following all thousands of pure hadees and it's enough and no need more fights for such kind of pure people like us.Nobody knows anything about Our last moments so be pious to RUB who is watching us closer and leave all fights and now we love more than Deen our own jemath and we speaks about our jemath not about our creater also we forget to talk about our real leader but we always talk about our jemath and trying to defend our jemath using social medias.The joke is we are not talking the examples of Sahaba while we speaks about latest personality who gave some books for us.We as muslims thinking the same way the kuffar thinks and using same methods to overcome the issues we are facing now but take the recent example of srilankan muslims who dua and bring rain from Rub so why can't we united forgetting our jemath which will bring all barakah from our creater.We need to go back 1400 years to solve our domestic and social problems and practice should be the same of Sahabas until we not do this we will not become standard.Why we waste our times on arguments to defend our jemath wallahi brothers one day will come your jemath or ur leaders cannot defend you at all.If your works are only behalf of Rub and you follow not your recent intellectuals but Muhammad Sal alone then our chances are their to recite kalima.Our each actions are recorded so politely requesting be united as muslims forget your jemath which will never save from the hellfire.Think once and be closer to our creater not the creations.forgive me and Allah knows best.
ReplyDeleteour situation is nowadays, we have lots of problem and we find a way to overcome it. Unfortunately what we do, we lost our hope and look some to tells us a miracle to follow. It is very wrong Allah is our greator and he send a Qur'an, it is our primary manual, along withe that he send our beloved prophet to practice example. It is the Hadees.
ReplyDeleteAs a Muslim we need to turn our self towards Qur'an and Hadees for our solution rather a certain individual.
Next when publishing article it is better to avoide it because readers are knoldgable.
The site of a mimber is not a evidence. Many thinking Muslims are fools and stupid to believe such kissas.There is no authority to take in any news without analyze. In Islam very important is evidence for anything.There is no place to fiction in Islam.
ReplyDeleteThe site of a mimber is not a evidence. Many thinking Muslims are fools and stupid to believe such kissas.There is no authority to take in any news without analyze. In Islam very important is evidence for anything.There is no place to fiction in Islam.
ReplyDeletePlease my dear brother author
ReplyDeleteYou people fighting and arguing for nothing even this minor issue please stop like this argument. First try to pray 5 times in masjith in jamath
No one praying in masjith just bring. unwanted argument
Why Hajiar traveled by Bus? Where is his KDH?
ReplyDeleteNiros. super.
ReplyDeleteஇங்கு கட்டுரையாசிரியர் கூரியவற்றை " ஹாஜியார் மௌனமாக இருந்தார், அவன் பக்கட்டில் கைவிடுவதை கண்டும் அவன் இறங்கி ஓடும்போதே மற்வர்களை பாக்கட்டுகளை செக்பன்ன சொல்லி எச்சரிக்கை செய்யாத்தும் , அந்த களவனிடமிருந்து போனை பறிக்க தைரியமிருந்த அவளுக்கு கூக்குரலிடவோ அல்லது தனது கனவனுக்கு உடனே போன் போட்டு சொல்லவோ, அல்லது அயலவர்களின் உதவியுடன் பொலிஸிட்கு போன் பன்னி சொல்லவோ முடியாது போனதன் காரணம் என்ன? அந்த logic பேசிய Nizous இடம் கேட்டு பின்னூட்டம் இட்டிருந்தேன். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் JM அதை பிரசுரிக்கவில்லை.
ReplyDeleteNizous க்கு அந்த கள்வன் அவரின் வீட்டிற்கு எவ்வளவு அற்புதமானது. ஆனால் இருவருக்கும் தொடர்பிருக்க வாய்பபு உண்டு என்பது இந்த சம்பவம் நடந்த விதம் அவள் போன் கிடைத்த பின் நடந்து கொண்ட விதம், இலங்கையில் நடக்க கூடிய ஒரு விடயத்தை தான் நான் " தொடர்பு இருக்க சாத்தியமுண்டு என்று கூரினேன்!
ReplyDeleteவீடு தேடி வந்து கொடுக்கும் கள்வர்கள் இருப்பது சாத்தியமாகும் என்று சொல்லும் நீங்கள் மனைவியின் நடத்தைப்படி பாரத்தால் தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு எனபதை ஏற்க மறுப்பது ஏன் ?
நீங்களோ, ஹாஜியாரோ சொன்னது கட்டுப்பதையாக இல்லாமலிருந்தால் , அதுதான் சாத்தியம். ஆனாலும் கணவன் அவ்வளவு முட்டாளாக இருக்கமாட்டான். அவளிடம் ஏன் நான் வீடு வரும் வரை சொல்லாமல் இருந்தாய்? ஏன் அயலவர்களை கூப்பிடவில்லை? என்று நிச்சயமாக கேள்வி கேட்டிருப்பான்.
ஆகையால் இந்த சம்பவம் இருவரில் ஒருவரால் ( ஹாஜயார் , Nizous ) புனையப்பட்டது என்பது தெட்டத்தெளிவு.
நாங்கள் தொப்பி போடும் முஸலிம்கள் எனபதால் " அபிட தொப்பிய தான்ட என்ட எபா" ( எங்களுக்கு தொப்பி போட நினைக்கவேண்டாம்) தொப்பியை தலையை மறைக்கவே போடுகிறோம், மூலையை மறைத்து வைக்க அல்ல.