இலங்கை முஸ்லிம்களை, பலிகொடுக்க முயற்சி - எச்சரிக்கிறார் விஜித தேரர்
-ARA.Fareel-
முஸ்லிம்களின் தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எதிரான சதிகளை முறியடித்தனர். அஷ்ரபுக்குப் பின்பு ஹக்கீமும், ரிசாத்பதியுதீனும் முஸ்லிம்களை பிளவுபடுத்திவிட்டனர்.
இதனாலே சில இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஒற்றுமைப்பட்டு எதிர்கொள்ள அவர்களால் முடியாதுள்ளது என ஜாதிக பலசேனாவின் செயலாளரும், மஹியங்கனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான வட்டரக்க விஜித தேரர் தெரிவித்தார்.
இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ள நிலையில் பொதுபலசேனா அமைப்பும் சிங்கள ராவயவும் இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ்.தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்துகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் மூலம் இலங்கையின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர். இலங்கையில் எங்காவது குண்டு வெடித்தால் ஐ.எஸ்.தீவிரவாதத்தை சம்பந்தப்படுத்தி முஸ்லிம்களைப் பலிக்கடாவாக்கப் பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில் முஸ்லிம்கள் தொடர்பில் உண்மையான கருத்துகளை நான் வெளியிடுவதால் பொதுபலசேனா போன்ற அமைப்புகள் என்னை எதிர்க்கின்றன.
எனது ஊடக மகாநாட்டைக் குழப்பினார்கள். காடையர்கள் மூலம் என்னைத் தாக்கினார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டியுள்ளது. ஆனால் இன்று அவர்கள் தேசிய மகாநாடுகளை நடாத்தி தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்களேயன்றி சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதில் கரிசனையற்று இருக்கிறார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தாத வரையில் இளைஞர்களை நேர்வழிப்படுத்த முடியாது. இலங்கைக்குள் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டால் இணைந்து கொள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். அதனால் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது. முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடமையாகும்.
இந்நாட்டில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் வாழவேண்டும். அதற்கான வழி அமைக்கப்படவேண்டுமென்பதே ஜாதிக பலசேனாவின் இலட்சியமாகும். கடந்த ஆட்சிக்காலத்திலும் சில பெளத்த இனவாத அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டன. இந்த அரசாங்கத்தின் காலத்திலும் முஸ்லிம்களுக்கெதிராக குரல் எழுப்பி வருகின்றன.
முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களே முன் வரவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.
சிங்களராவய அக்மீமன தேரர் ஐ.எஸ்.ஸை இலங்கையிலும் தடைசெய்ய வேண்டும் என்கிறார். இவ்வாறான குழப்பமான சூழ்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதம் இல்லை என்று நிரூபிப்பது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும் என்கிறார்.
சமகால முஸ்லீம் சமூகத்தை பற்றிய உன்மையை தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால் எமது அரசியல்வாதிகள்,உலமாக்கள்,புத்திஜீவிகள் எனப்படுவோர் பணம்,பதவி,அந்தஸ்து இவற்றுக்காகவே 24 மணி நேரமும் உழைக்கும் போது முஸ்லீம் சமூகத்தை பற்றி நினைக்கக்கூட அவர்களுக்கு நேரமிருக்காது.ஆகவே அவர்களையும் குரைகூற முடியாது.எனவே இவர்களை விடுத்து புதிதாக சிந்தித்து முஸ்லீம் உம்மாவை ஒற்றுமைப் படுத்தி பழய நிலைக்கு கொண்டுவர அல்லாஹ்விற்காக மட்டும் உழைக்கக் கூடிய இளைஞ்சர்கள் களமிறங்குவது காலத்தின் தேவையாகும்.
ReplyDeleteGreat speech.PLEASE CONSIDER THIS MATTER VERY SERIOUS BY OUR MINISTERS AND MP.S
ReplyDeleteஇந்த கேடு கேட்ட அரசியல் வாதிகள் இன்று முஸ்லிம்களை அவர்களின் சுயநலத்திற்காக வித்து கொண்டு இருக்கார்கள் பிரித்தாளும் தன்மையை கையாளுஹின்றார்கள்
ReplyDeleteஆனால் கசப்பான உண்மை என்ன என்றால் உங்களுக்கு விளங்கிய அளவுக்காவது இந்த அறிவிழந்த முஸ்லிம் சமுதாயத்துக்கு விளங்க வில்லை என்பதுதான்
கவலையாக உள்ளது