"முஸ்லிம் சமூகத்துக்கு என்ன தேவை என்பதை, தமிழ் கூட்டமைப்பு சொல்லத் தேவையில்லை"
இனப்பிரச்சினைக்கான தீர்வில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் பிரிந்திருக்க வேண்டும் என சொல்லும் தைரியம் இன்னமும் முஸ்லிம் காங்கிரசுக்கு வராமை அக்கட்சியின் கிழக்க முஸ்லிம்கள் பற்றிய அக்கறையின்மையை காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
உலமா கட்சித்தலைமையகத்தில் நடை பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிதலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தமது உரையொன்றில் இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கு எதனை வழங்குவது என்பதை த தே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சொன்ன பிறகே தமது தீர்வை சொல்வோம் என கூறியிருப்பது அவரதும் அவர் கட்சியினதும் கையாலாகாதனத்தை காட்டுகிறது.
தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது கிழக்கையும் வடக்கையும் இணைக்க வேண்டும் என த தே கூட்டமைப்பு தெளிவாக முன் வைத்துள்ளது. முஸ்லிம் மக்களுக்கான தீர்வு என்பது கிழக்கும் வடக்கும் பிரிக்கப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்றும் பிரிந்துள்ள வடக்கில் வடமாகாண முஸ்லிம்களுக்கு அவர்கள் விரும்பினால் தனியான சுயாற்சி சமஷ்டி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் உலமா கட்சி தெளிவாக தைரியமாக தனது தீர்வை முன்வைத்துள்ளது.
ஆனால் முஸ்லிம் காங்கிரசோ திரு. சம்பந்தன் முஸ்லிம்களுக்கான தீர்வை முன்வைத்த பின்னரே தமது தீர்வை முன்வைக்கப் போவதாக கூறுவதன் மூலம் முஸ்லிம்களுக்கான தீர்வுத்திட்டம் எதுவும் இவர்களிடம் இல்லை என்பதும் சமூகத்தை ஏமாற்றவே இவ்வாறெல்லாம் பேசி சமாளிக்கிறார்கள் என்பதும் தெளிவாகதெரிகிறது. கிழக்கை வடக்குடன் இணைக்கம் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை என சொல்ல முடிந்தவர்களால் அதுவே தமது கட்சியினதும் தீர்வு என சொல்ல முடியாமைக்கான காரணம் என்ன என்பதை மு. கா பகிரங்கப்படுத்த வேண்டும்.
உலமா கட்சியை பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்துக்கு என்ன தேவை என்பதை தமிழ் கூட்டமைப்போ அல்லது வடமாகாணசபையோ சொல்லத் தேவையில்லை. அந்தளவுக்கு முஸ்லிம் சமூகம் அறிவு வறுமை கொண்டதாக இல்லை. முஸ்லிம் சமூகம் தனியான தேசிய இனம் என்பதால் அதற்குத்தேவையான தீர்வை அந்தச்சமூகத்தின் தலைவர்களே முன் வைக்கவேண்டும். இந்த வகையில் உலமா கட்சி பொறுப்புடன் தனது தீர்வை முன் வைத்துள்ளது. ஆனால் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் தூங்கிக்கொண்டிருப்பதுடன் தமிழ் கூட்டமைப்பிடம் முஸ்லிம்களுக்கான தீர்வை கேட்பது வெட்கங்கெட்டசெயலாகும் எனவும் முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.

Post a Comment