'வட் வரி' முரண்பாடு -ரணில் மைத்திரி அவசரமாக சந்திக்கிறார்கள்
வட் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மேலதிகமாக சிரேஸ்ட அமைச்சர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பு அலரி மாளிகையில் இந்த வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட் வரி அதிகரிப்பானது நுகர்வோரையே பாதிக்கும் எனவும் தொலைபேசிக் கட்டணம், நீர் கட்டணனம், மின்சாரக் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றில் தாக்கத்தை செலுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வட் வரி அதிகரிப்பிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடளாவிய ரீதியில் போராட்டமொன்றை நடத்தப்படவுள்ளதாகவும் தொரிவிக்கப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் மே தினத்தில் முதல் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் குறிப்பிடப்படுகிறது.
Post a Comment