Header Ads



"எனக்கு ஆச்சரியமளிக்கின்றது" மஹிந்த


தனது பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எனது பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 100 இராணுவப் படையினரில் 50 பேர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு இராணுவத்தினரை அகற்றி பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் எஞ்சியுள்ள படையினரும் அகற்றிக் கொள்ளப்பட உள்ளனர். எனது பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமை வருத்தமளிக்கின்றது.

திடீரென இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டமை எனக்கு ஆச்சரியமளிக்கின்றது என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

5 comments:

Powered by Blogger.