Header Ads



மகரகம வைத்தியசாலைக்கு, உதவுவது பற்றிய கலந்துரையாடல்

-அஷ்ரப் ஏ சமத்-

மகரகம வைத்தியாலைக்கு 200 மில்லியன் ருபா நிதி சேகரித்து ஒரு பெட் ஸ்கணா் மெசினை கொள்முதல் செய்வதற்காக கதிஜா பவுண்டேசன் தலைவா் என்.எம். ரவல்ஸ் கடந்த 6 மாதகாலமாக திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றாா். அந்த வகையில் இன்றும் இதற்காக தன்னாலான உதவிகளைச் செய்வதற்காக பல்கலைக்ககழக விரிவுரையாளா் அமிலத் தேரர் முன் வந்து இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மகரகம வைத்தியசாலைக்குச் சென்று கலந்துரையாடினாா். அத்துடன் வைத்திய அதிகாரியுடன் புற்றுநோய்னால் பா திக்கப்பட்டுள்ள சிறுவா் வாட்டுக்கும் சென்று பாா்வையிட்டாா். நிதி திரட்டுதல் சம்பந்தமாக பல்வேறு நடவடிக்கைகள் உதவியாளா்கள் அன்பளிப்பாளா்கள் அரசியல்வாதிகள் அமைச்சா்களை எவ்வாறு அனுகி இதனை அடையலாம் என்பன பற்றி முஹம்மத் தேரருக்கு விளக்கிக் கூறினாா். இதனை ஏற்றுக் கொண்ட தேரா் இது சம்பந்தமாக முதலில்  சுகாதார அமைச்சர் ஜனாதிபதி ஆகியோரையும்  சந்திப்பதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.




No comments

Powered by Blogger.