Header Ads



பத்திரிகைகளை பார்க்கும்வரை, பயம் ஏற்படுகிறது - அமைச்சர் கயந்த

சிலவேளைகளில் தான் கருத்தொன்றைக் கூறும்போது, அடுத்து வௌிவரும் பத்திரிகைகளை பார்க்கும் வரை பயம் ஏற்படுவதாக, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

சிலவேளை தான் கூறியவற்றுக்கு மாறாக பிறிதொரு கதையே பத்திரிகைகளில் வௌிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தெரண ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள "தெலி பிகியென் கிரி கேம - 02 நவீன ஊடகவியலாளர்களுக்கான சவால்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சி நிலையங்களை நிறுவவேண்டியது அவசியம் என இங்கு கருத்துரைத்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதற்காக சீன அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதற்காக அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், பிரதமர் அடுத்ததாக சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும், இதன்போது இந்த விடயம் குறித்தும் அவதானம் செலுத்துமாறு தான் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.