மியான்மரில் புத்த துறவியான, முன்னாள் சர்வாதிகாரி
மியான்மரில் கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்தது. சமீபத்தில் தான் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இறுதியாக ராணுவ ஆட்சியில் சர்வாதிகாரியாக தெய்ன் செயின் என்பவர் பதவி வகித்தார். இவர் 5 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவர் பதவியில் இருந்த போது தான் ஜனநாயக ஆட்சிக்கு வழிவகை செய்யப்பட்டது.
ஓய்வு பெற்ற இவர் 5 நாட்களுக்கு மட்டும் புத்த துறவி ஆகியுள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை பியின் ஆல்வின் நகரில் உள்ள புத்த மடத்துக்கு சென்று புத்த பிட்சு உடையணிந்து துறவி ஆக மாறினார். புத்த துறவியாக இருக்கும் கோலத்தில் தியான பயிற்சி மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராணுவ ஆட்சியின் போது அதிபர் பதவியில் இருந்த அவர் அப்போது புத்த துறவியாக விரும்பியுள்ளார். இந்த விருப்பத்தை தற்போது நிறைவேற்றி கொண்டதாகவும் கூறினார்
Post a Comment