Header Ads



இலங்கையில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, தற்காலிகமாக ஒத்திவைப்பு


ஏ.ஆர்.ரஹ்மானின் இலங்கையில் நடைபெற இருந்த மாபெரும் இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் முக்கியஸ்த்தரும் சந்தைப்படுத்தல் முகாமையாளருமான டபிள்யு.விஜேந்திரன் தெரிவித்தார்.
 
ரஹ்மானின் இசை நிகழ்ச்சி எதிர்வரும்  23ஆம் திகதி காலி முகத்திடலில் நடத்தப்படவுள்ள நிலையில் அவரது வருகை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்ததாகவும், தற்போது இந்தியாவில் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இலங்கையிலும் புது வருடப்பிறப்பை முன்னிட்டு விடுமுறையாகையால் இதற்குத் தேவையான வேலைப்பாடுகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க சந்தர்ப்பம் இல்லாத பட்சத்திலேயே இந்நிகழ்ச்சி சற்று பிற்போடப்பட்டது எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கும் அரசியலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

6 comments:

  1. Ya Allah protect our Muslim brothers and sisters.. from this Music (SATANIC) program.

    Let those Muslims who does not know still Music as a Sin..GET to know the saying of Quran and Hadees of Muhammed (pbuh) on this issue.

    ReplyDelete
  2. அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete
  3. அவர் ஒரு தமிழர், ஒரு முஸ்லிம், சர்வதேச அரங்கில் இசைக்காக பல்வேறு விருதுகளை வென்றவர். இசையை ரசிக்காத உள்ளங்கள் உலகில் இல்லை.

    நாகூர் ஹனீபாவின் பக்திப் பாடல்கள், ஹிந்தியில் முஹம்மது ராபி, சம்ஷாத் பேகம், நவ்ஷாத் என்று இந்தியாவையே கலக்கினார்கள். உலகம் இவர்களை என்றைக்குமே மறக்காது. முஹம்மது ராபியின் குரலைக் கேட்காத காதுகளே இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம்.

    இவ்வளவும் இருக்க, முஸ்லிம்கள் சிலர் மட்டும் ஏன் இசையை வெறுக்கின்றனர்? புரியவில்லை.

    ReplyDelete
  4. Don't you know Hari, the bottom line is, whatever you do or eat, (some exceptions) is haram for us...

    ReplyDelete
  5. Hari Thivahar.....Whoever has muslim names doesnt mean they are true Muslim.... (By names or by birth)
    You must understand there are rules & regulations to be followed by a true Muslim....and then only he will be in circle of Islam...
    Hope you understand now....

    ReplyDelete
  6. Mr. Hari Thvahar... thank you for question. GET to know

    ISLAM is not what you see among the Muslim around you. BUT
    ISLAM is what QURAN and WAY of Muhammed (pbuh) cammanded to all of us.

    So based on QURAN and the Way of our Prophet... It is clearly mentioned that MUSIC is prohibited for a GOD Believer.

    There are many Muslims who do not practice what is in Quran and Sunnah.. due to their lack of knowledge about the Religion.

    We pray the TRUE ONE GOD who created You, Me and All to guide us in correct path till will enter his paradise.

    We can only Enter the paradise by permission of the GOD who created it and by obeying his commandments.

    Muhammed.

    ReplyDelete

Powered by Blogger.