மைத்திரிக்கு மகிந்த, விடுத்துள்ள சவால்
வடக்கு,கிழக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர், குறைந்தபட்சம் கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குச் சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
அனுராதபுரவில் நேற்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், கருத்து வெளியிட்ட அவர்,
“முன்னாள் போர் வலயத்தில் நல்லிணக்கம் பற்றிப் பேசும் அரசாங்கம், தொடர்ந்து கட்சி உறுப்பினர்களை இடைநிறுத்தியும், வெளியேற்றியும் வருகிறது.
தீவிரவாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட விவகாரத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறது.
உண்மையை அறிய முனையும் மக்களை அரசாங்கம் மிரட்டுகிறது. இதுபற்றி கேள்வி எழுப்பிய ஜி.எல்.பீரிசிடம் நடத்தப்பட்ட விசாரணை இதனையே காட்டுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment