Header Ads



பெண்களுக்கு எதிராக, ஆண்கள் பேரணி - துருக்கிய ஜனாதிபதியை தலையிடக் கோரிக்கை


துருக்கியில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஆண்கள் தங்களை திருமணம் செய்ய மறுக்கும் பெண்களுக்கு எதிராக பேரணி மேற்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் தென்பகுதியில் அமைந்துள்ளது யுஸம்லூ கிராமம்.

இந்த கிராமத்தை சேர்ந்த பெண்களில் பலரும் கிராமத்தில் வசிக்க விரும்பாததால் அருகில் உள்ள இஸ்தால்புல், அங்கரா, அண்டால்யா போன்று நகரங்களுக்கு சென்று திருமணம் செய்துகொள்கின்றனர்.

இதன் காரணமாக இந்த கிராமத்தில் திருமணம் நடைபெற்று 9 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் இத்தகைய போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 25 முதல் 45 வயது வரையுள்ள திருமணமாகாத 25க்கும் ஏற்பட்ட ஆண்கள் பேரணி மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் துருக்கி ஜனாதிபதி ரசிப் தைப் எர்டோகன் தலையிட்டு தங்களுக்கு நல்ல முடிவை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் பதாகைகளையும் ஏந்திச்சென்றனர்

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியின் மேயர் முஸ்தபா பஷ்பிலான் கூறியதாவது, சுமார் 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பேரணி மேற்கொண்டர்.

திருமணம் நடந்தே 9 ஆண்டுகள் ஆவதால் இந்த கிராமத்தில் மக்கள் தொகை குறைந்துள்ளது. மக்கள் தொகை முன்னர் 400ஆக இருந்தது. ஆனால் தற்போதே 233 பேர் மட்டுமே வசிக்கின்றனர். எனவெ பெண்கள் உடனடியாக கிராமத்தை விட்டும் செல்லும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.