பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
டி20 உலகக் கோப்பையை மே.இ.தீவுகள் வென்றதையடுத்து நீண்ட காலம் இழுபறியில் இருந்துவரும் வீரர்கள் சம்பள விவகாரம் தீர்வதற்கான சாதக நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இதன் முதல் அறிகுறியாக மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் அணி வீர்ர்களை பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்துள்ளது.
அதாவது வீரர்களுடன் பேசி அணியின் சிறந்த திறன்கள் ஒருநாள், டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்கான வழிவகை செய்யப்படுவதோடு, ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளுக்கு பொதுவான அடிப்படைகளின் கீழ் தீர்வு காணப்படும் என்று மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவ் கேமரூன் தெரிவித்தார்.
உலகக் கோப்பை டி20-யை 2-வது முறையாக வென்ற ஒரே அணி மே.இ.தீவுகளே. ஆனால் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு எந்தவித ஆதரவையும் அளிக்கவில்லை, சீருடைக்கே நாங்கள் தவிக்க நேரிட்டது என்று கேப்டன் டேரன் சமி தனது பேட்டியில் குறிப்பிட்டது, கடைசியாக மேல்மட்டத்தின் காதுகளுக்கு எட்டியுள்ளது.
ஆனால் டேரன் சமி கருத்தை ‘முறையற்றது’ என்று டேவ் கேமரூன் கண்டித்துள்ளார்.
Post a Comment